சோடியம் பொலோனைடு

சோடியம் பொலோனைடு (Sodium polonide) என்பது Na2Po என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய ஒரு வேதிச்சேர்மமாகும். பொலோனியச் சேர்மங்களில் அதிக வேதியியல் நிலைப்புத்தன்மை கொண்டது பொலோனைடு ஆகும்.[2][3] சோடியத்திற்கும் பொலோனியத்திற்கும் இடையே உள்ள மின்னெதிர்த்தன்மை வேறுபாடு (பெளலிங்கின் திட்டத்தின் படி ≈ 1.1) காரணமாகவும் பொலோனியத்தின் சிறிதளவு மாழையிலித்தன்மை காரணமாகவும் இடை மாழைச் சேர்மநிலை, அயனிச் சேர்மநிலை என்ற இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் சோடியம் பொலோனைடு காணப்படுகிறது.

சோடியம் பொலோனைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
சோடியம் பொலோனைடு
பண்புகள்
Na2Po
வாய்ப்பாட்டு எடை 254.96 கி/மோல்
தோற்றம் சாம்பல் நிறம்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

ஐதரோபொலோனிக் அமிலம் என்றழைக்கப்படும் நீர் கலந்த ஐதரசன் பொலோனைடு சோடிய உலோகத்துடன் [2][3] ஒடுக்க வினை புரிந்து சோடியம் பொலோனைடு உருவாகிறது. ஐதரசன் பொலோனைடு, சோடியம் பகுதிப்பொருளாக உள்ள |காரங்களுடன் அமிலக்கார வகை வினை புரிந்தும் சோடியம் பொலோனைடு தயாரிக்கப்படுகிறது.

H2Po + 2 Na → Na2Po + H2

ஐதரசன் பொலோனைட்டின் வேதியியல் நிலைப்புத்தன்மையின்மை, இத்தொகுப்பு வினை நடைபெறுவதற்கு இடையூற்றை உண்டாக்குகிறது.

சோடியம், பொலோனியம் ஆகிய இரண்டையும் சேர்த்து 300 முதல் 400 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தியும் சோடியம் பொலோனைட்டைத் தயாரிக்கலாம்[1].

வடிவமைப்பு தொகு

இலித்தியம் பொலோனைடு, மற்றும் பொட்டாசியம் பொலோனைடு போலவே சோடியம் பொலோனைட்டுச் சேர்மமும் புளோரைட்டுக் கனிமத்தின் அமைப்புக்கு எதிரான படிக அமைப்பைக் கொண்டிருக்கிறது.[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Bagnall, K. W. (1962). "The Chemistry of Polonium". Advances in Inorganic Chemistry and Radiochemistry. New York: Academic Press. பக். 197–230. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780120236046. http://www.google.com/books?id=8qePsa3V8GQC. பார்த்த நாள்: சூன் 17, 2012. 
  2. 2.0 2.1 2.2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. பக். 899. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-08-022057-6. http://books.google.co.nz/books?id=OezvAAAAMAAJ&q=0-08-022057-6&dq=0-08-022057-6&source=bl&ots=m4tIRxdwSk&sig=XQTTjw5EN9n5z62JB3d0vaUEn0Y&hl=en&sa=X&ei=UoAWUN7-EM6ziQfyxIDoCQ&ved=0CD8Q6AEwBA. 
  3. 3.0 3.1 3.2 Moyer, Harvey V. (1956), "Chemical Properties of Polonium", in Moyer, Harvey V. (ed.), Polonium, Oak Ridge, Tenn.: United States Atomic Energy Commission, pp. 33–96, doi:10.2172/4367751, TID-5221.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_பொலோனைடு&oldid=2052692" இலிருந்து மீள்விக்கப்பட்டது