இலிபிகைட்டு

கார்பனேட்டு கனிமம்

இலிபிகைட்டு (Liebigite) என்பது ஒரு யுரேனியம் கார்பனேட்டு கனிமமாகும்>. Ca2(UO2)(CO3)3·11H2O. என்ற மூலக்கூற்று வாய்பாடால் இக்கனிமம் விவரிக்கப்படுகிறது. யுரேனியத்தை பகுதிப் பொருளாகக் கொண்டுள்ள தாதுக்களின் ஆக்சிசனேற்ற மண்டலத்தில் இரண்டாம் நிலை கனிமமாக இலிபிகைட்டு தோன்றுகிறது. இக்கனிமம் பச்சை நிறம் முதல் பசுமஞ்சள் வரையிலான நிறத்தில் இருக்கும். மோவின் அளவு கோலில் இலிபிகைட்டு 3 என்ற மதிப்பைக் கொண்டுள்ளது. மற்ற சில யுரேனியம் கனிமங்களைப் போலவே இலிபிகைட்டும் புறவூதா ஒளியின் கீழ் ஒளிரும். இக்கனிமம் ஒளிகசியும் தன்மையை கொண்டுள்ளது. செஞ்சாய்சதுரப் படிகக் கட்டமைப்பில் இது படிகமாகும். பொதுவாக படிந்த ஏடாக அல்லது சிறுமணித் திரட்டுகளாக இலிபிகைட்டு உருவாகும்.[1][2][3] பன்னாட்டு கனிமவியல் நிறுவனம் இலிபிகைட்டை Lbi என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. [4]

இலிபிகைட்டு
Liebigite
கொலராடோ மாநிலத்தின் இயெபர்சன் மாகாணம் ரால்சுடன் புட்சு மாவட்டத்தில் கிடைத்த இலிபிகைட்டு படிகங்கள்
பொதுவானாவை
வகைகார்பனேட்டு படிகங்கள்
வேதி வாய்பாடுCa2(UO2)(CO3)3·11H2O
இனங்காணல்
படிக இயல்புகுறுகிய பட்டகப் படிகங்கள் போல அரிதானவை; மேலோடுகள் மற்றும் திரள்களில் செதில்கள் அல்லது சிறுமணிகள்.
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
பிளப்பு{100} இல் தனித்தன்மை
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை2 12 – 3
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும், ஒளிகசியும்
ஒப்படர்த்தி2.41
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 1.497 nβ = 1.502 nγ = 1.539
இரட்டை ஒளிவிலகல்δ = 0.042
பலதிசை வண்ணப்படிகமைகாணலாம்: X = கிட்டத்தட்ட நிறமற்றது Y = Z = இளம்பசுமஞ்சள்
2V கோணம்37° to 42°
புறவூதா ஒளிர்தல்குறுகிய மற்றும் நீண்ட அலை புற ஊதா ஒளியின் கீழ் வலுவான பச்சை நீலம்-பச்சை நிற ஒளிர்தல்
பிற சிறப்பியல்புகள் கதிரியக்கம்
மேற்கோள்கள்[1][2][3]

முதன்முதலில் 1848 ஆம் ஆண்டில் துருக்கி நாட்டின் 7 புவியியல் பிராந்தியங்களில் ஒன்றான மர்மரா பிராந்தியம் எடிர்னே மாகாணம் எடிர்னே நகரத்தில் கண்டறியப்பட்டது. 1803–1873 காலத்தில் வாழ்ந்த செருமானிய வேதியியலாளர் இயசுடசு வோன் இலிபிக்கு நினைவாக கனிமத்திற்கு இலிபிகைட்டு எனப் பெயரிடப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலிபிகைட்டு&oldid=3878475" இலிருந்து மீள்விக்கப்பட்டது