மர்மரா பிராந்தியம்


துருக்கியின் மர்மரா பிராந்தியம் (Marmara Region), துருக்கி நாட்டின் 7 புவியியல் பிராந்தியங்களில் ஒன்றாகும். இப்பிராந்தியம் துருக்கியின் வடமேற்கில் உள்ள மர்மரா கடலைச் சுற்றி அமைந்துள்ளது. இப்பிராந்தியம் துருக்கியின் 7 பிராந்தியங்களில் இது இரண்டாவது சிறிய மாகாணம் ஆகும். ஆனால் மக்கள்தொகை அடர்த்தியில் முதலிடத்தில் உள்ளது. இப்பிராந்தியத்தில் 11 மாகாணங்கள் உள்ளது. இதன் பெரிய நகரம் இஸ்தான்புல் ஆகும். பிற முக்கிய நகரங்கள் பூர்சா, இஸ்மித், பாலிகேசிர், தெகிர்தாக், சானாகலே மற்றும் எடிர்னே ஆகும். 67,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை சனவரி 2022ல் 2,70,50,405 ஆகும். துருக்கியில் இப்பிராந்தியமே மக்கள் தொகை மற்றும் தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் உள்ளது. மேலும் இது ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களை இணைக்கிறது.

துருக்கியின் மர்மரா பிராந்தியம்
Marmara Bölgesi
துருக்கியின் பிராந்தியம்
பொசுபோரசு நீரிணை
ஹக்கியா சோபியா
இஸ்தான்புல் மெய்டன் கோபுரம்
ஓர்தகோய் பள்ளிவாசல், இஸ்தான்புல்
லெவண்ட் மாவட்டம்
இஸ்தான்புல் கோபுரம்
சிவப்பு நிறத்தில் துருக்கியின் மர்மரா பிராந்தியம்
சிவப்பு நிறத்தில் துருக்கியின் மர்மரா பிராந்தியம்
ஆள்கூறுகள்: 41°00′N 29°00′E / 41.000°N 29.000°E / 41.000; 29.000
நாடுதுருக்கி
தலைநகரம்இஸ்தான்புல்
மாகாணங்கள்
11
  • பாலிகேசிரி
  • பைலேசிக்
  • பூர்சா
  • சனக்கேலே
  • இதிர்னே
  • இஸ்தான்புல்
  • கிர்க்லாரேலி
  • கோசாலி
  • சகாரியா
  • தெகிர்தாக்
  • யாலோவா
பரப்பளவு
 • மொத்தம்67,000 km2 (26,000 sq mi)
 • பரப்பளவு தரவரிசை6வது
மக்கள்தொகை
 (சனவரி 2022)(INSEE)
 • மொத்தம்2,70,50,405
 • தரவரிசை1வது
இனம்மர்மராலிகள்
நேர வலயம்ஒசநே+03:00 (துருக்கி சீர் நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+03:00
ஐஎசுஓ 3166 குறியீடுTR-IDF
பிராந்தியத்தின் மொத்த உற்பத்தி[1]முதல் இடம்
 –மொத்தம்$582 பில்லியன் / 1,405,514 மில்லியன் (GDP PPP), 2018
 –தனி நபர் வருமானம்€60,100 ($71,900)
இணையதளம்marmara.gov.tr

அமைவிடம்

தொகு

மர்மரா பிராந்தியத்தின் மேற்கில் ஏஜியன் கடல் மற்றும் கிரேக்கமும், வடக்கில் பல்கேரியா மற்றும் கருங்கடலும், கிழக்கில் கருங்கடல் பிராந்தியம், மற்றும் தெற்கில் ஏஜியன் பிராந்தியம் எல்லைகளாக உள்ளது.

மர்மரா பிராந்திய மாகாணங்கள்

தொகு
  1. பலகேசீர் மாகாணம்
  2. பிலெசிக் மாகாணம்
  3. பர்சா மாகாணம்
  4. கனக்கலே மாகாணம்
  5. எடிர்னே மாகாணம்
  6. இஸ்தான்புல் மாகாணம்
  7. கோர்க்லாரெலி மாகாணம்
  8. கோகேலி மாகாணம்
  9. சாகர்யா மாகாணம்
  10. தெகிர்தா மாகாணம்
  11. யலோவா மாகாணம்

தட்ப வெப்பம்

தொகு

மர்மரா பிராந்தியத்தின் ஏஜியன் கடற்கரை மற்றும் தெற்கு மர்மரா கடற்கரைப் பகுதிகளில் நடுநிலக்கடல் சார் வானிலை மற்றும் ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலை கொண்டது. மர்மரா பிராந்தியத்தின் உட்புறப் பகுதிகளில் கடல்சார் காலநிலையும், கருங்கடல் பகுதிகளில் ஈரப்பதமான கண்ட காலநிலையும் கொண்டுள்ளது. கோடையில் குறைந்த வெப்பமும்; குளிர்காலத்தில் குளிரும், சில நேரங்களில் பனிப்பொழிவும் ஏற்படுகிறது.

இதனையும் காண்க

தொகு
இஸ்தான்புல் நகரத்தின் அகலப்பரப்புக் காட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Database - Regions - Eurostat".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்மரா_பிராந்தியம்&oldid=3817812" இலிருந்து மீள்விக்கப்பட்டது