எடிர்னே மாகாணம்
எடிர்னே மாகாணம் (Edirne Province, துருக்கியம்: Edirne ili ) என்பது கிழக்கு திரேசில் அமைந்துள்ள ஒரு துருக்கிய மாகாணமாகும் . இது ஐரோப்பிய துருக்கியின் ஒரு பகுதியாகும். முற்றிலும் ஐரோப்பா கண்டத்துக்குள் அமைந்துள்ள மூன்று துருக்கிய மாகாணங்களில் இதுவும் ஒன்றாகும். எடிர்னே மாகாணத்தின் உள்நாட்டு எல்லைகளாக கிழக்கில் தெக்கிர்ததக் மாகாணம் மற்றும் கோர்க்லாரெலி மாகாணமும், தென் கிழக்கே காலிபோலி தீபகற்பத்தின் கனக்கலே மாகாணமும் உள்ளன. மேலும் இது வடக்கே பல்கேரியாவுடனும், மேற்கில் கிரேக்கத்துடனும் பன்னாட்டு எல்லைகளைக் கொண்டுள்ளது.
எடிர்னே மாகாணம்
Edirne ili | |
---|---|
துருக்கியில் எடிர்னே மாகாணத்தின் அமைவிடம் | |
நாடு | துருக்கி |
பகுதி | கிழக்கு மர்மரா |
துணைப்பகுதி | திக்கிரிடாக் |
அரசு | |
• தேர்தல் மாவட்டம் | எடிர்னே |
பரப்பளவு | |
• மொத்தம் | 6,279 km2 (2,424 sq mi) |
மக்கள்தொகை (2018)[1] | |
• மொத்தம் | 4,11,528 |
• அடர்த்தி | 66/km2 (170/sq mi) |
இடக் குறியீடு | 0284 |
வாகனப் பதிவு | 22 |
எடிர்னே நகரம் மாகாணத்தின் தலைநகரமாகவும், மிகப்பெரிய நகரமாகவும் உள்ளது.
வரலாறு
தொகு1363 முதல் 1453 வரை உதுமானியப் பேரரசின் மூன்றாவது தலைநகராக மாகாணத்தின் தலைநகராக எடிர்னே இருந்தது குறிப்பிடத்தக்கது.
19 பிப்ரவரி 1934 இல் உருவாக்கப்பட்ட எடிர்னே மாகாணம் இரண்டாவது இன்ஸ்பெக்டரேட் ஜெனரலில் சேர்க்கப்பட்டது. இந்த இரண்டாவது இன்ஸ்பெக்டரேட்டானது எடிர்னே, அனக்கலே, கோர்க்லாரெலி, டெக்கிர்டாஸ் போன்ற மாகாணங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. [2] இது ஒரு இன்ஸ்பெக்டர் ஜெனரலால் ஆளப்பட்டது, அவர் குடிமை சமூகம், இராணுவம், கல்வி போன்ற விஷயங்களில் பரந்த அதிகாரங்களைக் கொண்டிருந்தார். [3] இன்ஸ்பெக்டரேட் ஜெனரலின் அலுவலகம் 1948 இல் கைவிடப்பட்டது [4] ஆனால் இன்ஸ்பெக்டரேட் ஜெனரல்களின் சட்ட கட்டமைப்பானது ஜனநாயகக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் 1952 இல்தான் ரத்து செய்யப்பட்டது. [5]
மாவட்டங்கள்
தொகுஎடிர்னே மாகாணம் 9 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து குறிபிடப்பட்டுள்ளது):
- எடிர்னே
- எனெஸ்
- ஹவ்ஸா
- இப்சலா
- கெசான்
- லாலபாசா
- மெரிக்
- சுல்கோலு
- உசுன்காப்ரா
புள்ளிவிவரங்கள்
தொகுஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1927 | 1,50,840 | — |
1940 | 2,51,373 | +66.6% |
1950 | 2,21,268 | −12.0% |
1960 | 2,76,479 | +25.0% |
1970 | 3,16,425 | +14.4% |
1980 | 3,63,286 | +14.8% |
1990 | 4,04,599 | +11.4% |
2000 | 4,02,606 | −0.5% |
2010 | 3,90,428 | −3.0% |
2018 | 4,11,528 | +5.4% |
குறிப்புகள்
தொகு- ↑ "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
- ↑ Cagaptay, Soner (2006). Islam, Secularism, and Nationalism in Modern Turkey; Who is a Turk. Routledge. p. 47.
- ↑ Pekesen, Berna. The Heritage of Edirne in Ottoman and Turkish Times: Continuities, Disruptions and Reconnections. Walter de Gruyter GmbH & Co KG. pp. 423–424.
- ↑ Bayir, Derya. Minorities and Nationalism in Turkish Law. Routledge.
- ↑ Bozarslan, Hamit. The Cambridge History of Turkey. Cambridge University Press. p. 343.