இலீமிங்டன்
இலீமிங்டன் (Leamington) என்பது இங்கிலாந்தின் வார்விக்சயரில் உள்ள ஒரு நீரூற்று நகரமும், கிராம சபையுமாகும். முதலில் இலீமிங்டன் பிரியர்சு என்று அழைக்கப்பட்ட இந்த சிறிய கிராமம், 18 ஆம் நூற்றாண்டில் ஒரு நீரூற்று நகரமாக வளர்ந்தது. இதன் நீர் மருத்துவ குணங்கள் கொண்டதாக இருந்ததாக பிரபலப்படுத்தியதைத் தொடர்ந்து புகழ் பெற்றது. [1] 19 ஆம் நூற்றாண்டில், இந்த நகரம் இங்கிலாந்தில் மிக விரைவான விரிவாக்கத்தை அனுபவித்தது. [2] நகரத்தின் ஊடாக பாயும் இலீம் ஆற்றின் பெயரால் இது பெயரிடப்பட்டது.
இந்த நகரம் குறிப்பாக பிரித்தானியப் பேரரசின் கட்டிடக்கலைகளில் சிறந்தவற்றைக் கொண்டுள்ளது. குறிப்பாக பரேட்டும், கிளாரிண்டன் சதுக்கமும், இலான்ஸ்டவுன் சர்க்கஸ் ஆகியவற்றின் சில பகுதிகளில் இவை காணப்படுகின்றன.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இதன் மக்கள் தொகை 49,662 பேர் ஆகும். இதன் அண்டை நகரங்களான வார்விக், விட்னாஷ் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. ஒருங்கிணைந்த நகர்ப்புறமான் இதில் 2011 இல் 95,172 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. [3]
இந்ந்கரம் கிழக்கு நோக்கியும், மேற்கு நோக்கியும் ஓடும் இலீம் ஆற்றால் பிரிக்கப்பட்டுள்ளது. இது தீவிர வானிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடியது. குறிப்பாக 1998 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. [4] [5]
இந்த நகரத்தில் பல பூங்காக்களும், தோட்டங்களும் உள்ளன. [6] 1998 ஆம் ஆண்டின் வெள்ளத்தில் இவை கடுமையாக சேதமடைந்தன. ஆனால் அவை தேசிய இலாட்டரியின் நிதியுதவியுடன் மீட்டமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. [7] [8]
சுற்றுலா
தொகு19 ஆம் நூற்றாண்டில் நகரத்தின் நீரின் புகழ் நகரத்தின் ஆரம்ப வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இது 19 ஆம் நூற்றாண்டில் சுற்றுலா இலீமிங்டனின் முதன்மைத் தொழிலாக மாறியது. [9]
சில்லறை வணிகம்
தொகுநகரத்தின் மையாத்தில் தெருவோர சங்கிலிக் கடைகள் முதல் சுயாதீன சில்லறை விற்பனைக் கடை வரை பலவிதமான கடைகள் உள்ளன. [10]
குறிப்புகள்
தொகு- ↑ "The Penny Magazine 1833–1848". Extracted and digitised by The Society for the Diffusion of Useful Knowledge. Archived from the original on 27 September 2011. பார்க்கப்பட்ட நாள் 9 August 2009.
- ↑ "Leamington Spa Courier". The Courier. Johnston Press Digital Publishing. Archived from the original on 28 September 2009. பார்க்கப்பட்ட நாள் 9 August 2009.
- ↑ "UNITED KINGDOM: Urban Areas in England". City Population. Archived from the original on 8 April 2018. பார்க்கப்பட்ட நாள் 8 April 2018.
- ↑ "Jumbo flood warning issued" இம் மூலத்தில் இருந்து 18 October 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031018134609/http://news.bbc.co.uk/1/hi/england/coventry_warwickshire/3200602.stm. பார்த்த நாள்: 30 May 2011.
- ↑ "Films cancelled after town floods". http://news.bbc.co.uk/1/hi/england/coventry_warwickshire/6914139.stm. பார்த்த நாள்: 30 May 2011.
- ↑ "Judgement day as Leamington goes for gold again – Leamington Spa Today – Back to Home Page". Leamingtoncourier.co.uk. Archived from the original on 4 August 2012. பார்க்கப்பட்ட நாள் 27 May 2009.
- ↑ Warwick District Council website (PDF) பரணிடப்பட்டது 27 செப்டெம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம் Retrieved 8 August 2009
- ↑ "Nature reserves". Warwick District Council. Archived from the original on 1 September 2012. பார்க்கப்பட்ட நாள் 20 June 2012.
- ↑ Trinder, Barry, (2003) The Godfrey Edition Old Ordnance Survey Maps: Leamington Spa (South) 1923, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84151-517-5
- ↑ "Leamington Shopping Park". Leamington Shopping Park. Archived from the original on 16 January 2014. பார்க்கப்பட்ட நாள் 15 January 2014.
மேலும் படிக்க
தொகு- Storrie, Janet (1990) Elephants in Royal Leamington Spa Weir Books பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9514433-1-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9514433-1-6
வெளி இணைப்புகள்
தொகு- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Royal Leamington Spa
- Royal Leamington Spa Town Council