இலுப்பையூர் (விருதுநகர் மாவட்டம்)
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமம்
இலுப்பையூர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள கிராமம். இவ்வூர் குண்டாற்றுக் கரையில் அமைந்துள்ளது. இவ்வூர் மக்களின் முக்கிய தொழில் விவசாயம், கால்நடை மற்றும் வனிகம் ஆகும். இங்கு அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.[1] இப்பள்ளியில் 300 மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர். இவ்வூரில் அஞ்சலக வசதி உள்ளது. இங்கு பாண்டியன் கிராம வங்கி அமைந்துள்ளது. குன்டாறு பாய்வதால் குடிநீர் வசதி உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி பள்ளிகள், தினமலர், நாள்: மே 22, 2015