இலெவ் சுகாயெவ்

உருசிய வேதியலாளர்
(இலெவ் அலெக்சாண்ட்ரோவிக் சுகேவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலெவ் அலெக்சாந்திரோவிச் சுகாயெவ் (Lev Aleksandrovich Chugaev, 16 அக்டோபர் 1873 – 26 செப்டம்பர் 1922) உருசிய நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். மெண்டலீவுக்கு அடுத்து செயிண்ட் பீட்டர்சுபெர்க் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசியராகப் பணியாற்றியது இவரது வாழ்வின் மிகச்சிறந்த பணியாகும். கனிம வேதியியல், குறிப்பாக அப்பிரிவில் பிளாட்டினம் தொகுதி அணைவுச் சேர்மங்கள் மற்றும் கரிம வேதியியல் பிரிவுகளில் இவர் ஆர்வமுடையவராக இருந்தார்.[1][2][3]. இவர் லியோ அலெக்சாண்ட்ரோவிக் திசுகாயெஃப் அல்லது திசுகாயெவ் என்றும் அழைக்கப்படுகிறார்.

இலெவ் அலெக்சாந்திரோவிச் சுகாயெவ்
பிறப்பு(1873-10-16)16 அக்டோபர் 1873
மாஸ்கோ, உருசியா
இறப்பு26 செப்டம்பர் 1922(1922-09-26) (அகவை 48)
க்ரியாசொவெத்சு, உருசியா
பணியிடங்கள்மாஸ்கோ பல்கலைக்கழகம்,
செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் பல்கலைக்கழகம்]
கல்வி கற்ற இடங்கள்மாஸ்கோ பல்கலைக்கழகம்
அறியப்படுவதுசுகாயெவ் நீக்கல் வினை

ஒருங்கிணைவு வேதியியல் பங்களிப்பு

தொகு

இருமெத்தில்கிளையாக்சைம் என்ற சேர்மம், நிக்கல்(II) அயனிகளுடன் சேர்ந்து செஞ்சிவப்பு நிறத்திண்மமாக மாறுகிறது என்று சுகாயெவ் கண்டறிந்தார். இவ்வினையே உலோகங்களைக் கண்டறிவதற்கான முதல் சிற்றிடஆய்வாகும். ஆல்பிரட் வெர்னரின் விதிகளையொட்டி இவர் பிளாட்டினம் தொடர்பு வேதியியலுக்காக பல்வேறு வகையான பங்களிப்புகளை அளித்துள்ளார். குளோரோபெண்டமின்பிளாட்டினம்(IV) அயனியை பகுதிப்பொருளாகக் கொண்டுள்ள [Pt(NH3)5Cl]Cl3 உப்பானது சுகாயெவ் உப்பு[4] என்றழைக்கப்படுகிறது. இவருடைய ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட பிற அணைவுச் சேர்மங்கள் [Pt(SEt2)4][PtCl4], [Pt(NH3)5OH]Cl3, [Os(SC(NH2)2)6Cl3.H2O என்பனவாகும்.

ஐதரசீன் சேர்மத்தின் அணைவுச் சேர்மங்களைக் குறித்தும் சுகாயெவ் ஆய்வுகள் மேற்கொண்டார். சுகாயெவ் உப்பு என்றழைக்கப்படும் அணைவு உப்பு பிளாட்டினம்(II) உப்புகள் மீத்தைல் ஐசோசயனைடு மற்றும் ஐதரசீனுடன் வினைபுரிவதால் உண்டாகின்றன.[5] . பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சேர்மங்கள் கார்பீன் அணைவுச் சேர்மங்கள் எனக் கூறப்பட்டன. அநேகமாக முதல் உலோக கார்பீன் அணைவுச் சேர்மம் இதுவாகக்கூட இருக்கலாம்.[6]

கரிமவேதியியல் பங்களிப்புகள்

தொகு

ஒற்றை டெர்ப்பீன், துசீன் ஆகியவை தொடர்பான ஆய்வின் போது சுகாயெவ் நீக்கல் வினையை இவர் கண்டறிந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Kauffman, G. B. (1963). "Terpenes to Platinum: The Chemical Career of Lev Aleksandrovich Chugaev". J. Chem. Educ. 40: 656–665. doi:10.1021/ed040p656. https://archive.org/details/sim_journal-of-chemical-education_1963-12_40_12/page/656. 
  2. Kauffman, G. B. (1973). "A Russian Pioneer in Platinum Metals Research The Life and Work of Lev Aleksandrovich Chugaev". Platinum Metals Rev. 17: 144–148. http://www.technology.matthey.com/pdf/pmr-v17-i4-144-148.pdf. பார்த்த நாள்: 2015-07-07. 
  3. J. A. Voelcker, A. Harden, T. M. Lowry and Percival J. Fryer (1923). "Obituary notices: Frederick James Lloyd, 1852–1922; Georg Lunge, 1839–1923; Alexander Smith, 1865–1922; Jokichi Takamine, 1855–1922; Leo Alexandrovitsch Tschugaev, 1873–1922; Frank Edwin Weston, 1867–1923". J. Chem. Soc., Trans. 123: 946–959. doi:10.1039/CT9232300946. 
  4. Yusenko, K.V.; Zadesenets, A.V.; Baidina, I.A.; Shubin, Yu.V.; Vasil'chenko, D.B.; Korenev, S. V. (2006). "Re-determination of the crystal structure and investigation of thermal decomposition of Chugaev's salt, (Pt(NH3)5Cl)Cl3·(H2O)". Zhurnal Strukturnoi Khimii 47: 749–753. doi:10.1007/s10947-006-0362-0. 
  5. Chugaev, L.; Skanavy Grigorieva, M.; Posniak, A. (1925). "Über Die Hydrazin-Carbylamin-Komplexe des Platins". Z. anorg. Chem. 148: 37–42. doi:10.1002/zaac.19251480105. 
  6. Rouschias, G.; Shaw, B. L. (1970). "A revised structure for Chugaev's salt [PtC8H15N6]xClx". J. Chem. Soc. D: 183–183.. doi:10.1039/C29700000183. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலெவ்_சுகாயெவ்&oldid=3593573" இலிருந்து மீள்விக்கப்பட்டது