இலேபியோ கவுரசு
இலேபியோ கவுரசு (Labeo kawrus), தக்காண இலேபியோ என அழைக்கப்படும் இந்த மீன் இலேபியோ பேரினத்தினைச் சார்ந்தது. இது இந்திய மாநிலங்களான கர்நாடகா மற்றும் மகாராட்டிரம் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதியில் பாயும் கிருஷ்ணா ஆற்றில் மட்டுமே காணப்படுகிறது. இது ஆறுகளின் மேல் பகுதிகளில் காணப்படும் ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் காணப்படுகிறது. இம்மீன் 60 செமீ நீளம் வரை வளரக்கூடும். தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன் இனப்பெருக்கம் தொடங்குகிறது. கரிம மற்றும் கனிம மாசுபாடு, வாழ்விட அழிப்பு, அதிகப்படியான மீன் பிடித்தல் காரணங்களால் இவ்வகை மீன்கள் கடுமையாக அச்சுறுத்தப்படுகின்றன. வடக்கு பகுதியில் இம்மீன்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான சான்றுகள் உள்ளன.[1]
இலேபியோ கவுரசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Labeo |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/LabeoL. kawrus
|
இருசொற் பெயரீடு | |
Labeo kawrus Sykes, 1839[2] | |
வேறு பெயர்கள் | |
|