இலைலா கான்

பாக்கித்தானிய நடிகை

இலைலா கான் (Laila Khan) பிறப்பு ரேசுமா படேல் 1978 -30 சனவரி 2011) ஓர் பாலிவுட் நடிகை ஆவார். 2008இல் வெளியான வாபா: எ டெட்லி லவ் ஸ்டோரி என்ற படத்த்திலும், 2011இல் வெளியான பரார் என்ற படத்திலும் நடிகர் ராஜேஷ் கன்னாவுடன் இணைந்து நடித்ததற்காக இவர் சிறப்பாக அறியப்படுகிறார். இவர் தடைசெய்யப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத்-உல்-ஜிஹாத் அல்-இஸ்லாமியைச் சேர்ந்த முனீர் கான் என்பவரை மணந்தார்.[1] இலைலா கான், தனது குடும்பத்தைச் சேர்ந்த சிலருடன், 2011 இல் மகாராட்டிராவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.[2]

இலைலா கான்
பிறப்புரேசுமா பட்டேல்
1978
மும்பை, இந்தியா
இறப்பு30 சனவரி 2011
மும்பை, இந்தியா
இறப்பிற்கான
காரணம்
சுடப்பட்டு இறந்தார்
தேசியம்இந்தியர்
வாழ்க்கைத்
துணை
முனிர் கான்

பயங்கரவாத நடவடிக்கைகளில் பங்கு

தொகு

இலைலா கான், லஷ்கர்-ஏ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்புக்கு மும்பை நகரம் பற்றிய தகவல்களை வழங்க திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.[3]

காணாமல் போதல்

தொகு

30 சனவரி 2011 இரவில், இவரும், இவரது தாயார் செலினா, மூத்த சகோதரி அசுமினா, இரட்டை உடன்பிறப்புகள் இம்ரான் மற்றும் சாரா, மற்றும் உறவினர் ரேசுமா ஆகியோருடன் மும்பையிலிருந்து மும்பைக்கு வடக்கே 126 கிமீ தொலைவில் உள்ள இகத்புரியில் உள்ள விடுமுறை இல்லம் நோக்கி சென்றனர். 9 பிப்ரவரி 2011 அன்று, இவரது தாய் தனது சகோதரி அல்பனா பட்டேலுடன் பேசினார். கான் சண்டிகரில் தனது மூன்றாவது கணவர் பர்வேசு இக்பால் தக் உடன் இருப்பதாகக் கூறினார். இதற்குப் பிறகு, குடும்பம் ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது.[4]

அதைத் தொடர்ந்து, இவரது தந்தை, நாதிர் சா பட்டேல் (செலினாவின் முதல் கணவர்) மும்பை காவல் நிலையத்தில் தனது குடும்பத்தினருடன் தனது மகள் காணாமல் போனதாக புகார் அளித்தார்.[5] இதே போன்ற புகாரை பாலிவுட் திரைப்பட இயக்குநர் ராகேஷ் சாவந்த்தும் தாக்கல் செய்தார். இவர் மும்பையில் இருந்து காணாமல் போவதற்கு முன்பு 'ஜின்நாத்' என்ற தனது இரண்டாவது படத்தை இலைலா கானை வைத்து படமாக்கினார்.

நாதிர் சா படேல் 17 சூலை 2012 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தனது மகளின் கொலை வழக்கை குற்றப் பிரிவிலிருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றக் கோரி முறையிட்டார். காவலர்கள் இவ்வழக்கை உடனடியாக விசாரிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.[6]

காவலர் துறை விசாரணை

தொகு

இவரது தாயின் தற்போதைய கணவர், பர்வேசு இக்பால் தக், சந்தேகத்திற்குரிய லஷ்கர்-ஏ-தொய்பாவின் உறுப்பினர். மேலும் ஆசிப் சேக் (செலினாவின் இரண்டாவது கணவர்), இவரும் இவரது குடும்பம் காணாமல் போனதற்கு பின்னால் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. விசாரணையின் போது நாதிர் சா பட்டேலையும் காவலர்கள் விசாரித்தனர்.

பின்னர், ஆசிப் சேக் கைது செய்யப்பட்டார். அவர் தானும் பர்வேசு இக்பால் தக்கும் சேர்ந்து இலைலாவின் குடும்பத்தை சுட்டு கொன்றதாக ஒப்புக்கொண்டார்.[7] ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரிடம் பர்வேசு இக்பால் தக் முன்னதாக அளித்த வாக்குமூலத்தில் ஆசிப் சேக்கின் பெயர் இணை சதிகாரர்களில் ஒருவராக வெளிப்படுத்தப்பட்டது.[8]

பின்விளைவு

தொகு

பணம், பொறாமை, சொத்து மற்றும் துபாய்க்கு குடும்பத்தை மாற்றுவது ஆகியவை குடும்ப கொலைக்கு காரணம் என்று நம்பப்படுகிறது.[9] தக் விசாரணையில் தான் நேபாளத்திற்கு தப்பிச் செல்ல விரும்பினார் என்பது தெரியவந்தது. அங்கு அவரது லஷ்கர்-இ-தொய்பா இணைப்புகள் அவரை கைது செய்வதை தவிர்க்க உதவியது. இருப்பினும், அவர் நேபாளத்திற்கு தப்பிச் செல்வதற்கு முன்பு, மற்றொரு வழக்கில் ஜம்மு & காஷ்மீர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "All about B-Town starlet Laila Khan". Archived from the original on 2012-07-11. பார்க்கப்பட்ட நாள் 2021-09-17. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Starlet Laila Khan shot dead in 2012, trail leads to Jammu and Kashmir". Archived from the original on 2012-07-12. பார்க்கப்பட்ட நாள் 2021-09-17.
  3. "Missing starlet Laila Khan recced Mumbai for LeT in 2011". IBN Live. Mumbai. 7 June 2012. Archived from the original on 8 June 2012. பார்க்கப்பட்ட நாள் 17 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help); Unknown parameter |= ignored (help)
  4. "Sex, Sin and the Missing Starlet".
  5. "Laila Khan kidnapped?" இம் மூலத்தில் இருந்து 2018-09-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180923130242/https://www.deccanchronicle.com/tabloid/glam-sham/laila-khan-kidnapped-684. 
  6. "Laila Khan's father moves HC seeking CBI probe". 17 July 2012 இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125080945/http://www.hindustantimes.com/India-news/Mumbai/Laila-Khan-s-father-moves-HC-seeking-CBI-probe/Article1-890535.aspx. 
  7. "Suspect confesses he killed Laila, her family".
  8. "Laila Khan murder mystery persists; 3 more accused". 6 July 2012.
  9. "Greed, jealousy drove Tak to murder starlet and family: Police". 12 July 2012 இம் மூலத்தில் இருந்து 12 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120712084529/http://www.hindustantimes.com/India-news/Mumbai/Greed-jealousy-drove-Tak-to-murder-starlet-and-family-Police/Article1-887145.aspx. 
  10. "Laila Khan killer Tak wanted to flee to Nepal, seek LeT help". 12 July 2012. http://zeenews.india.com/entertainment/celebrity/laila-khan-killer-tak-wanted-to-flee-to-nepal-seek-let-help_115098.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலைலா_கான்&oldid=4162404" இலிருந்து மீள்விக்கப்பட்டது