இளங்காற்று
தமிழ் ஆங்கிலம் அகராதி
இளங்காற்று 1997இல் ஜெர்மனியில் இருந்து வெளிவந்த சஞ்சிகை. இதன் ஆசிரியர் திலீபன். இது ஐரோப்பியாவில் தமிழ் வானொலிகளின் வரவுகளுக்கு முன்னர், சஞ்சிகைகள், பத்திரிகைகளின் வரவுகள் கூட பலரையும் சென்றடையாத நிலையில் மேற்கு ஜெர்மனி தமிழ் மக்களையும், மாணவர்களையும் கருத்தில் கொண்டு தொடங்கப் பெற்றது.
இளங்காற்று | |
---|---|
இதழாசிரியர் | திலீபன் |
துறை | |
வெளியீட்டு சுழற்சி | மாதம் |
மொழி | தமிழ் |
முதல் இதழ் | மார்ச், 1997 |
இறுதி இதழ் | மே, 1997 |
இதழ்கள் தொகை | இதுவரை 3 |
வெளியீட்டு நிறுவனம் | |
நாடு | ஜெர்மனி |
வலைப்பக்கம் | [] |
முதல் இதழ்
தொகுமுதல் இதழ் இளமை 1, காற்று 1, மார்ச் 1997 இல் வெளிவந்துள்ளது.
பணிக்கூற்று
தொகுமுகப்பட்டை
தொகுஜெர்மனியரான Hoffman ஆல் பிடிக்கப்பெற்ற புகைப்படத்துடன், மூனாவினால் வடிவமைக்கப் பெற்றுள்ளது.
உள்ளடக்கம்
தொகுகவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், இலக்கியத் துணுக்குகள், ஜெர்மன் மொழி, சமையல் குறிப்புகள் ஆகியன இடம் பெற்றுள்ளன. இதழ்கள் 40 பக்கங்களைக் கொண்டிருந்தன.
வெளி இணைப்புகள்
தொகு- இளங்காற்று 1997 நூலகம் திட்டத்தில்