மூனா
மூனா (பிறப்பு: மே 14, 1954) ஈழத்து ஓவியர், எழுத்தாளர். 1984 முதல் புலம் பெயர்ந்து செருமனியில் வசித்து வருகிறார். இவர் நாடக இலக்கியத்திலும், புனைகதைகளிலும் ஈடுபாடு கொண்டவர். சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட இவர் ஓவியர் மாற்கு மாஸ்டரின் மாணவர். இயல்பிலேயே நகைச்சுவையாகப் பேசும் தன்மை கொண்ட இவர் கேலிச்சித்திரங்களை வரைவதிலும், நகைச்சுவை ததும்பும் சமூகப்பாங்கான நாடகங்களை எழுதி மேடையேற்றுவதிலும், கதைகள் புனைவதிலும், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதுவதிலும் வல்லவர். இவரது 200க்கும் மேற்பட்ட அரசியல் கேலிச்சித்திரங்கள் லண்டனிலிருந்து வெளிவரும் தமிழ்கார்டியன் பத்திரிகையில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. இதே நேரம் லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் ஐபிசி வானொலியில் இவரது, ஐம்பதிற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகி உள்ளன. ஆறு நாடகங்கள் ஜெர்மனியில் மேடையேறி உள்ளன.
மூனா | |
---|---|
பிறப்பு | புலோலி கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம் | மே 14, 1954
மற்ற பெயர்கள் | முல்லை, து |
கல்வி | Diploma in computer programm (NIBM Colombo, Srilanka)
கொழும்பு இந்துக் கல்லூரி. (இரத்மலானை) |
பணியகம் | அரசுப்பணி |
அறியப்படுவது | ஓவியர், கேலிச்சித்திர ஓவியர், எழுத்தாளர், நாடகாசிரியர், விமர்சகர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | திரு. திருமதி தெட்சணாமூர்த்தி |
பிள்ளைகள் | திலீபன், தீபா, துமிலன் |
வலைத்தளம் | |
http://mullai.blogspot.com/ http://kirukkall.blogspot.com/ |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஈழத்தில் யாழ்ப்பாண மாவட்டம், பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தெட்சணாமூர்த்தி, பந்துவதி தம்பதிகளின் கடைசிப் புதல்வர். தெ. நித்தியகீர்த்தியின் சகோதரர். இவர் தனது ஆரம்பக்கல்வியை புத்தளை மகா வித்தியாலயத்திலும், மேற்கல்வியை புலோலி ஆண்கள் ஆங்கில பாடசாலையிலும், கொழும்பு, இரத்மலானை இந்துக் கல்லூரியிலும் கற்றார். தொழிற்கல்வியை (Diploma in computer programm) கொழும்பு NIBM இல் கற்றார். ஓவியக்கலையை ஈழத்தில் மாற்கு (A. Mark) மாஸ்டரிடமும், ஜெர்மனியில் Eugen Zenzinger இடமும் கற்றார்.
ஓவியங்கள்/கேலிச்சித்திரங்கள்
தொகுஇவரது ஓவியங்களும், கேலிச்சித்திரங்களும் தமிழ்கார்டியன் [1], களத்தில், வீரகேசரி, தினகரன், ஈழநாடு, ஈழமுரசு, உலகத்தமிழர், முழக்கம், Aalener Volkszeitung (Germany), De Plekke (Holland) போன்ற பத்திரிகைகளிலும், எரிமலை, பூவரசு, புலம், காலச்சுவடு, இளங்காற்று போன்ற சஞ்சிகைகளிலும், கண்ணில் தெரியுது வானம், உராய்வு, மனஓசை, வானவில், தீட்சண்யம் போன்ற போன்ற நூல்களிலும் வெளிவந்திருக்கின்றன. இவர் பல நூல்களுக்கு முகப்போவியங்களும் வரைந்துள்ளார். சனவரி, 2010 இல் இருந்து பொங்குதமிழ் பரணிடப்பட்டது 2012-08-06 at the வந்தவழி இயந்திரம் இணையத்தளத்தில் இவரது கேலிச்சித்திரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.[2]
நாடகங்கள்
தொகுஇவரது ஐம்பதுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் ஐபிசி வானொலியில் ஒலிபரப்பாகி இருக்கின்றன. பல நாடகங்கள் ஜெர்மனியில் மேடையேறி பார்வையாளர்களின் பலத்த பாராட்டுதல்களையும், வரவேற்பையும் பெற்றுள்ளன. இவரது தாயென்னும் கோயில் என்னும் நாடகம் உலகளாவிய தமிழர்களுக்கிடையே லண்டன் ஐபிசி வானொலி நடாத்திய நாடகப் போட்டியில் தெரிவாகி முதலாவது பரிசாகத் தங்கப்பதக்கத்தை வென்றெடுத்தது.
இவரது நூல்கள்
தொகுவானொலி நாடகங்கள்
தொகு
- அதுவும் இதுவும்
- அம்மாவே எல்லாமாய்
- அவலம்
- ஆண் பார்க்க வந்தபோது
- உதவுவாயா?
- உப்பு
- உறவு
- உறுதி
- உன்னைக் கண் தேடுதே!
- எதிர்த்து நின்று சமாளி
- என்ன பார்வை உன்தன் பார்வை
- கரை சேருகிறான் காளை
- கல்யாண நாள் பார்க்கச் சொல்லவா?
- கல்யாணமாம் கல்யாணம்
- கன்னத்தில் என்னடி காயம்?
- காதலிக்கக் கற்றுக் கொள்
- காதில் கேட்கிறதா?
- காலமெல்லாம் வாராயோ
- காலை மாலை வேலை
- கைவிசேசம்
- கூடவரச் சம்மதமா?
- சந்திக்க ஏங்குகிறேன்
- சமையலுக்கும் மையலுக்கும்
- சிங்கப்பூர் சேலை
- சொல்லத்தான் நினைக்கிறேன்
- தங்கத்தாய்
- தாய்
- தாயென்னும் கோவில்
- நாடு நடக்கிற நடப்பிலே
- நான் என்ன சொல்லி விட்டேன்!
- நெஞ்சின் கனம்
- படிக்கவேண்டும் புதிய பாடம்
- பெண் ஒன்று கண்டேன்
- பேசுவது கிளியா?
- பொங்கும் மங்களம்
- போகாதே போகாதே என் கணவா
- மாலை சூட வந்த மங்கை
- வந்தாளே மகாராணி
- வரலாமா? வரலாமா?
- வாராயோ வெண்ணிலாவே
- வருவாளா அவள் வருவாளா?
- வாழத் துடிக்கிறேன்
- விடியுமட்டும் பேசலாம்
மேடை நாடகங்கள்
தொகு
- அவலம்
- அனர்த்தம்
- கரை சேருகிறான் காளை
- சிங்கப்பூர் சேலை
- தங்கத்தாய்
- வந்தாளே மகாராணி
வெளி இணைப்புகள்
தொகு- குறிஞ்சி
- துகிலிகை
- வியாக்கியானம்
- Tamil Guardian பரணிடப்பட்டது 2010-01-30 at the வந்தவழி இயந்திரம்
- Appal Tamil
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-07-01. பார்க்கப்பட்ட நாள் 2015-01-11.
- ↑ http://www.ponguthamil.com/karuthupadam.asp?ContentID=3ebb141c-d080-490b-af08-a639607a808c[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "நூலகத்தில்". Archived from the original on 2020-07-06. பார்க்கப்பட்ட நாள் 2020-07-06.
- ↑ மூனாவின் கிறுக்கல்கள் (நூல்) பற்றி என். செல்வராஜா