மனஓசை (நூல்)

சிறுகதை

மனஓசை 30 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு நூலாகும். இந்நூலில் இலங்கை, இந்தியா, கனடா, ஐரோப்பியா போன்ற நாடுகளில் வெளியாகிக் கொண்டிருந்த தமிழ் பத்திரிகைகள், சஞ்சிகைகள், தொகுப்பு நூல்கள் போன்றவற்றில் 1997 இல் இருந்து 2007 வரை சந்திரவதனாவால் எழுதப்பெற்று பிரசுரமான 30 படைப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப் பெற்றுள்ளன. நூலின் முகப்பு அட்டையையும், நூலையும் ஓவியங்களுடன் மூனா வடிவமைத்துள்ளார். கொழும்பு குமரன் அச்சகத்தாரால்(Kumaran Printers(Pvt) Ltd, Colombo, Srilanka) நூல் அச்சிடப்பட்டுள்ளது. நூலின் ISBN - 978-3-9813002-0-8.

மனஓசை
நூல் பெயர்:மனஓசை
ஆசிரியர்(கள்):சந்திரவதனா
வகை:சிறுகதை
துறை:புனைகதை
காலம்:ஆகஸ்ட் (ஆவணி) 2007
இடம்:கொழும்பு (பதிப்பகம்)
மொழி:தமிழ்
பக்கங்கள்:195
பதிப்பகர்:மனஓசை வெளியீடு
பதிப்பு:ஆவணி 2007
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

படைப்புகளின் தன்மைதொகு

ஈழப்போர், புலம்பெயர்வு, புலத்து வாழ்வு, பெண்களின் பிரச்சனைகள், சமூகப்பிரச்சனைகள், கலாச்சாரஅழுத்தங்கள்... போன்றவையை மையப்படுத்திய புலத்தையும், நிலத்தையும் தளமாகக் கொண்ட உண்மை நிகழ்வுகளின் புனைவு.

அரிமா சக்தி விருதுதொகு

திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தால் ஆண்டு தோறும் வழங்கப்படும் சிறந்த பெண்படைப்பாளிக்கான அரிமா சக்தி விருது இந்நூலுக்கு 2008இல் வழங்கப்பபட்டது.[1], [2]

உள்ளடக்கம்தொகு

 • பொட்டுகிளாஸ்
 • குண்டுமணிமாலை
 • சொல்லிச் சென்றவள்
 • நாகரிகம்
 • கணேஸ்மாமா
 • வேசங்கள்
 • பயணம்
 • பாதை எங்கே?
 • அக்கரைப் பச்சைகள்
 • அந்த மௌன நிமிடங்களில்...
 • தீர்க்கதரிசனம்
 • கல்லட்டியல்
 • உபதேசம்
 • விழிப்பு
 • மேடைப்பேச்சு
 • எதனால்?
 • என்னப்பா இன்னும் வெளிக்கிடேல்லையோ?
 • அம்மாவுக்குத் தெரிந்தது
 • விலங்குடைப்போம்
 • சங்கிலித் துண்டங்கள்
 • ஏன்தான் பெண்ணாய்?
 • வசந்தம் காணா வாலிபங்கள்
 • கனவான இனிமைகள்
 • இளங்கன்று
 • முரண்களும் முடிவுகளும்
 • இவர்களென்ன மார்க்கண்டேயர்களா?
 • மரணங்கள் முடிவல்ல
 • விவாகரத்து
 • சுமைதாளாத சோகங்கள்
 • பதியப்படாத பதிவுகள்

வெளி இணைப்புகள்தொகு

 1. http://rpsubrabharathimanian.blogspot.de/2009/11/blog-post_9259.html
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2016-03-05 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனஓசை_(நூல்)&oldid=3223761" இருந்து மீள்விக்கப்பட்டது