புலோலி

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம்

9°48′00″N 80°13′00″E / 9.80000°N 80.21667°E / 9.80000; 80.21667

புலோலி

புலோலி
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°48′00″N 80°13′00″E / 9.8°N 80.216667°E / 9.8; 80.216667
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


புலோலி[1] இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வடமராட்சி எனும் பிரிவில் அமைந்துள்ளது. இது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில், பருத்தித்துறைக்குச் சமீபமாக அமைந்துள்ளது.

புலோலி பழம்பெரும் பாரம்பரியத்தையும் நீண்ட புராதன மொழி, சமய கலாசார மரபு விழுமியங்களையும் தனித்துவமாகத் தன்னகத்தே கொண்ட புகழ்பூத்த நகரம் ஆகும். புலவர்களின் குரல் ஒலித்தமையால் புலோலி என்னும் காரணப்பெயர் இதற்கு சூட்டப்பெற்றது. பச்சிமப் புலவர்கான நகரம் என இதற்கு மறுபெயருமுண்டு.

பருத்தித்துறை நகரசபையின் தெற்கு எல்லை இதன் வடக்கு எல்லையாகவும், பருத்தித்துறை மருதங்கேணி வீதி இதன் கிழக்கு எல்லையாகவும், துன்னாலை, அல்வாய் என்னும் கிராமங்கள் முறையே இதன் தெற்கு மேற்கு எல்லைகளாகவும் அமைந்துள்ளன. அரச நிர்வாக நோக்கில், புலோலி திக்குவாரியாக 14 கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் பண்டிதர்கள், வித்துவ சிரோமணிகள், நாவலர்கள் , புலவர்கள் அறிஞர்கள் போன்றோர் புலோலியில் பிறந்து பணியாற்றித் தத்தம் முத்திரையைப் பதித்து மறைந்தமைக்கான சான்றுகள் உள்ளதாக அறியப்படுகிறது.

புலோலியைச் சேர்ந்தவர்கள்

தொகு

ஆலயங்கள்

தொகு
  • உபயகதிர்காமம் ஸ்ரீ சக்கர சண்முகர் ஆலயம்
  • புற்றளை சித்தி விநாயகர் ஆலயம்
  • ஸ்ரீ வல்லிபுராழ்வார் சுவாமி ஆலயம்
  • பல்லப்பை வைரவர் ஆலயம்
  • புலோலி வில்லிபாதி முருகன் ஆலயம்
  • புலோலி மேற்கு பூவற்கரை காமாட்சி அம்மன் ஆலயம்
  • மேலைப்புலோலி ஆலடிப் பிள்ளையார் ஆலயம் (புலோலி மேற்கு)
  • புலோலி தெற்கு மந்திகை ஆண்டியாவளவு ஞானவைரவர் ஆலயம்
  • புலோலி கிழக்கு சந்தாதோட்டம் மனோன்மணி அம்பாள் (முதலி அம்மன்) ஆலயம்
  • புலோலி வடக்கு பன்னையம்பதி வீரகத்தி விநாயகர் ஆலயம்
  • புலோலி தெற்கு முறாவில் பிள்ளையார் ஆலயம்
  • புலோலி தெற்கு கணை வைரவர் ஆலயம்
  • கூவில் கொட்டடி ஞானவைரவர் ஆலயம்
  • தென்புலோலி பெரியவளவு வீரபத்திரர் ஆலயம்
  • தென்புலோலி குரும்பைகட்டி ஞானவைரவர் ஆலயம்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலோலி&oldid=3899807" இலிருந்து மீள்விக்கப்பட்டது