மு. கணபதிப்பிள்ளை
தமிழறிஞர்
தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை இலங்கைத் தமிழ்ப் பண்டிதரும், தமிழறிஞரும் எழுத்தாளரும் ஆவார்.
மு. கணபதிப்பிள்ளை | |
---|---|
தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை | |
பிறப்பு | மு. கணபதிப்பிள்ளை புலோலி, யாழ்ப்பாணம், இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | தமிழறிஞர், நூலாசிரியர் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | தனபாக்கியம் |
பிள்ளைகள் | கமலினி செல்வராஜன் தமிழின்பம் மாணிக்கராஜா |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுமு. கணபதிப்பிள்ளை பருத்தித்துறை புலோலி என்ற கிராமத்தில் தமிழ் வித்துவப் பரம்பரையில் பிறந்தவர். இலங்கை அரச மொழித் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவர்.[1] இலங்கை வானொலியிலும், இலக்கிய மேடைகளிலும் மற்றும் இலக்கிய நூலுருவாக்கத்திலும் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தவர். இவரது மனைவி தனபாக்கியம் ஒரு வயலின் இசைக்கலைஞர். இவரது புதல்வியர்: தமிழின்பம் மாணிக்கராஜா மற்றும் இலங்கை வானொலிக் கலைஞர் கமலினி செல்வராஜன்.
எழுதிய நூல்கள்
தொகு- அன்னைதயை,
- தமிழன் எங்கே
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்
- பயிற்சித் தமிழ் 1
- மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும்
- மொழியும் மரபும்
- வான்மீகியார் தமிழரே!
மேற்கோள்கள்
தொகு- ↑ "கமலினி செல்வராசன்". Archived from the original on 2013-11-28. பார்க்கப்பட்ட நாள் 2013-11-05.