பால வயிரவநாதன்

(பால வைரவநாதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பருத்தியூர் பால வயிரவநாதன் ஈழத்து சமூக, உளவியல் எழுத்தாளர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பத்திரிகை எழுத்துத்துறை அனுபவம் மிக்க இவர் கவிதை, சிறுகதை, ஓவியம், இலக்கியக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள் எனப் பல்துறைகளிலும் எழுதியிருக்கிறார். இலங்கை அரசின் உயர் விருதான ‘கலாபூஷணம்’ விருது பெற்றவர்.[1]

பருத்தியூர் பால வயிரவநாதன்
பிறப்புபால வயிரவநாதன்
புலோலி
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பால வயிரவநாதன் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மாணவராக இருக்கும் போதே கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கி, ‘சங்கொலி’, ‘விஞ்ஞானி’ ஆகிய கையெழுத்துப் பிரதிகளை வெளியிட்டார். ஆரம்பக் கல்வியை முடித்த பின்னர், அரச எழுதுவினைஞர் சேவையில் இணைந்து, பல்வேறு அரச நிறுவனங்களிலும் பணியாற்றி, பின்னர் கொழும்பு இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் நிர்வாக அலுவலராக ஓய்வு பெற்றார்.[1] கலாசார அமைச்சின் கீழ் இயங்கும் தமிழ் சாகித்தியக் குழுவின் செயலாளராகவும் சில காலம் செயலாற்றினார்.[1]

பத்திரிகைத் துறையில்

தொகு

வயிரவநாதன் தனது 20ஆவது வயதில் ஏரிக்கரைப் பத்திரிகைகளுக்குக் கூட்டு நிருபராகவும், டைம்சு நிறுவனத்தின் ஈழமணி, மற்றும் யாழ்ப்பாணம் ஈழநாடு ஆகிய பத்திரிகைகளில் செய்திகள், கட்டுரைகளை எழுதினார்.

எழுத்துத் துறையில்

தொகு

‘வாழ்வியற் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இவரது கட்டுரைகள் ‘வாழ்வியல் வசந்தங்கள்’ என்ற தலைப்பில் பல பாககங்களாக வெளிவந்தன. இதன் முதற் தொகுதிக்கு இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசு கிடைத்தது.[1] வயிரவநாதன் பத்திரிகைச் சிறுகதைகளுக்கும், நூல்களின் அட்டைப் படங்களுக்கும் படங்களை வரைந்து உதவியுள்ளார். இவரது கவிதைகள் இலங்கையின் தேசிய வார இதழ்களில் வெளிவந்துள்ளன.

விருதுகள்

தொகு
  • கலாசார தேசிய மரபுரிமைகள் அமைச்சு ஆண்டுதோறும் அரச அலுவலர்களுக்கென நடத்தும் ஆக்க இலக்கியப் போட்டிகளில் இவர் பங்கு கொண்டு பரிசில்களைப் பெற்றுள்ளார். 2005, 2006 ஆம் ஆண்டுகளில் சிறுவர் இலக்கியத்துக்காக முதலாம் பரிசும், 2006ஆம் ஆண்டின் சிறுகதைக்காக கொழும்பு மாவட்டத்தில் முதலாம் பரிசும் அத்துடன் சிறப்புப் பரிசும் பெற்றார்.[1]
  • 2005 இல் இலண்டன் பூபாள இராகத்தின் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசும் பெற்றுள்ளார்.[1]

மேற்கோள்கள்

தொகு
தளத்தில்
பால வயிரவநாதன் எழுதிய
நூல்கள் உள்ளன.
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ம. சண்முகநாதன் (19-2-2010). "பருத்தியூர் பால வயிரவநாதனின் எழுத்துப் பணிகள்". தினகரன். Archived from the original on 2010-02-23. பார்க்கப்பட்ட நாள் 3-09-2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால_வயிரவநாதன்&oldid=3484048" இலிருந்து மீள்விக்கப்பட்டது