இளவேனில் வாலறிவன்

தமிழ்நாட்டைச் சேர்ந்த குறி பார்த்துச் சுடும் வீராங்கனை

இளவேனில் வாலறிவன் (Elavenil Valarivan, பிறப்பு: ஆகத்து 2, 1999) தமிழ்நாடு, கடலூரைச் சேர்ந்த குறி பார்த்துச் சுடும் வீராங்கனை ஆவார். இவர் 2019 பன்னாட்டு துப்பாக்கிச் சூட்டு விளையாட்டு அமைப்பின் 2019 உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி தங்கப் பதக்கத்தை வென்றார்.[2]

இளவேனில் வாலறிவன்
Elavenil Valarivan
Elavenil Valarivan.jpg
தனிநபர் தகவல்
இயற் பெயர்இளவேனில் வாலறிவன்[1]
தேசியம்இந்தியர்
இனம்தமிழர்
பிறப்புஆகத்து 2, 1999 (1999-08-02) (அகவை 22)
கடலூர்
வசிப்பிடம்அகமதாபாத்
கல்விஇளங்கலை, (ஆங்கில இலக்கியம்)
உயரம்164 செமீ (5.38 அடி)
எடை54 கிகி (119 இறா)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுமெய்வல்லுநர் (சுடுதல்)
நிகழ்வு(கள்)10 மீ காற்றுத் துப்பாக்கி
பன்னாட்டு துப்பாக்கிச் சூட்டு விளையாட்டு அமைப்பு (ISSF)

இளவேனில் 2018 ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற இளையோருக்கான உலகக்கோப்பைப் போட்டியில் போட்டியிட்டு தங்கப் பதக்கம் பெற்றார். 2019 உலகப் பல்கலைக்கழகப் போட்டிகளில் விளையாடி வெள்ளிப் பதக்கம் பெற்றார். பின்னர் 2019 இல் இளையோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார்.[3][4][5] 2019 ஆகத்து 28 இல் இரியோ டி செனீரோவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் 10 மீட்டர் காற்றுத் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கம் பெற்றார்.[2][6]

இளவேனில் மியூனிக்கில் நடந்த 2019 உலகக்கோப்பைப் போட்டியில் 10 மீ துப்பாக்கி சுடும் போட்டியில் பங்குபற்றி நான்காவதாக வந்தார்.[7][8]

மேற்கோள்கள்தொகு

  1. Ezhil (29 August 2019). "துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்ப் பெண் இளவேனில் - Elavenil Valarivan". Dinamani. https://www.dinamani.com/sports/sports-news/2019/aug/29/elavenil-valarivan-joins-elite-list-with-maiden-senior-shooting-world-cup-gold-in-rio-3223916.html. பார்த்த நாள்: 29 August 2019. 
  2. 2.0 2.1 சஞ்சயன் குலசேகரம் (29 ஆகத்து 2019). "தங்கம் வென்றார் தமிழகப் பெண் இளவேனில் வாலறிவன்". எஸ்.பி.எஸ். பார்த்த நாள் 29 ஆகத்து 2019.
  3. "Elavenil Valarivan shoots gold with Jr world record".
  4. "India's Elavenil Valarivan wins gold in ISSF Junior World Cup".
  5. "It feels amazing to break the world record: Elavenil Valarivan".
  6. Ezhil (29 August 2019). "துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்ப் பெண் இளவேனில் - Elavenil Valarivan". Dinamani. https://www.dinamani.com/sports/sports-news/2019/aug/29/elavenil-valarivan-joins-elite-list-with-maiden-senior-shooting-world-cup-gold-in-rio-3223916.html. பார்த்த நாள்: 29 August 2019. 
  7. Staff, Scroll. "Shooting: Apurvi Chandela wins 10m air rifle gold in ISSF World Cup in Munich" (en-US).
  8. "Shooter Elavenil Valarivan makes transition to seniors, wins gold - Times of India".

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளவேனில்_வாலறிவன்&oldid=3189977" இருந்து மீள்விக்கப்பட்டது