இளைய அப்துல்லாஹ்
இளைய அப்துல்லாஹ் (பிறப்பு: 21 மே 1968) இலங்கை முசுலிம் எழுத்தாளரும், வானொலி, தொலைக்காட்சி ஊடகவியலாளரும் ஆவார்.[1] இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவர். புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வருகிறார்.
இளைய அப்துல்லாஹ் | |
---|---|
பிறப்பு | எம். என். எம். அனெஸ் மே 21, 1968 ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு, இலங்கை |
இருப்பிடம் | இலண்டன் |
தேசியம் | இலங்கைச் சோனகர் |
அறியப்படுவது | எழுத்தாளர், ஒலி, ஒளிபரப்பாளர் |
பெற்றோர் | மொகமட் நவாஸ், ஹஃப்சா |
வலைத்தளம் | |
வலைப்பதிவு |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுஇளைய அப்துல்லாஹ் இலங்கையின் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டம், புளியங்குளத்தில் ஒட்டுசுட்டான் என்ற கிராமத்தில் மொகமட் நவாஸ், ஹப்சா ஆகியோருக்குப் பிறந்தவர். 1984 ம் ஆண்டில் இருந்து சிறுகதைகள், இலக்கியக்கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறார்.[1] 1996, 97 ஆம் ஆண்டுகளில் இலங்கை வானொலி தேசிய சேவையில் ‘விடியலை நோக்கி’ எனும் சமாதானத் தொனிப் பொருளில் சஞ்சிகை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 2000 சூலை முதல் இலண்டன் தீபம் தொலைக்காட்சியில் இணைந்து செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர், நிகழ்ச்சி விவரணத் தயாரிப்பாளராகப் பணியாற்றினார்.[1] தற்போது ஐபிசி தமிழ் தொலைக்காட்சி சேவையில் பணியாற்றுகிறார்.
விருதுகள்
தொகு- இலங்கை சாகித்திய மண்டலப்பரிசு 2005 (பிணம் செய்யும் தேசம், கவிதை நூலுக்காக)
- இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான பி.ஏ சிறீவர்த்தன விருது 2006
எழுதிய நூல்கள்
தொகு- துப்பாக்கிகளின் காலம், சிறுகதைத் தொகுப்பு, 2004
- பிணம் செய்யும் தேசம், கவிதைத் தொகுப்பு, இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்திருக்கிறது.
- அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன் கட்டுரைகள்
- கடவுளின் நிலம், கட்டுரைகள்
- லண்டன் உங்களை வரவேற்பதில்லை, கட்டுரைகள்
- நீரில் விளக்கெரியும் நந்திக்கடல், கட்டுரைகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "இளைய அப்துல்லாஹ் (அனெஸ்) இலண்டன்-". அக்கினிக்குஞ்சு. பார்க்கப்பட்ட நாள் 3 சூன் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]