இழுப்பா

மீன் இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Pristis|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

இழுப்பா, இலுப்பா, இளுப்பா (Largetooth sawfish) என பலவாறு அழைக்கப்படுவது வேளா மீன் குடும்பத்தின், வாள் மீன் இனத்தைச் சேர்ந்த ஒரு மீன் ஆகும். இது உலகளவில் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கடலோர பகுதிகளில் காணப்படுகிறது, ஆனால் இது நன்னீரிலும் நுழைகிறது. இதன் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்து உள்ளது. இதனால் மிக அருகிய இனமாக கருதப்படுகிறது.[1][2][3]

இழுப்பா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Pristis
இனம்:
இருசொற் பெயரீடு
Pristis pristis
(லின்னேயஸ், 1758)
வேறு பெயர்கள்

விளக்கம்

தொகு

இழுப்பா மீன் 7.5 மீ (25 அடி) நீளம் வரை வளரக்கூடியது. ஆனால் மேற்கு ஆப்பிரிக்காவில் 7 மீ (23 அடி) நீள மீன் உறுதி செய்யப்பட்டுள்ளது.[4] டெக்சாஸின் கால்வெஸ்டனில் 1951 இல் பிடிபட்ட ஒரு மீன், திரைப்படத்தில் ஆவணப்படுத்தப்பட்டது ஆனால் அளவிடப்படவில்லை, என்றாலும் அதே அளவு இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.[5] தற்போது காணப்படும் பெரும்பாலான மீன்கள் மிகவும் சிறியவையாக வழக்கமான 2-2.5 மீ (6.6-8.2 அடி) நீளம் கொண்டவையாக உள்ளன.[2] பெரிய மீன்கள் என்றால் 500-600 கிலோ (1,102-1,323 பவுண்ட்) எடையுள்ளவையாகவோ[6] அல்லது இன்னும் அதிகமாகவும் இருக்கலாம்.[7]

இழுப்பா மீனுக்கு இரம்பம் போன்ற முட்கள் கொண்ட கொம்பு உண்டு. இந்த கொம்பு இதன் அகலத்தில் 15-25% பாகத்தைக் கொண்டுள்ளது. இதன் கொம்பு மற்ற வாள் மீன் இனங்களுக்கு உள்ள கொம்புடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் அகலமானது.[8] இதன் கொம்பில் சமமாக பிரிக்கபட்ட 14-24 பற்கள் அதன் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளன.[3] [11] இவற்றில் பெண் மீன்களுக்கு ஆண்களைவிட குறைவான பற்களைக் கொண்ட குறுகிய கொம்பு உள்ளது. இவற்றின் கொம்பின் நீளம் வயதுக்கு ஏற்ப மாறுபடக்கூடியது. பொதுவாக மீனின் மொத்த நீளத்தில் சராசரியாக 27% கொண்டதாக கொம்பு இருக்கும்.[3] ஆனால் இளம்பருவத்தில் இது 30% ஆகவும் பெரிய மீன்களில் 20-22% ஆகவும் இருக்கும்.

இந்த மீனின் உடலின் மேல் பகுதி பொதுவாக சாம்பல் முதல் மஞ்சள்-பழுப்பு நிறத்தில் என பல வண்ண சாயல்களில் இருக்கும். பெரும்பாலும் இதன் துடுப்புகள் தெளிவான மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இவை நன்னீரில் காணப்பட்டால் தோலுக்கு கீழே இரத்த உறைவு காரணமாக சிவப்பு நிறத்தைக் கொண்டிருக்கலாம்.[6] மீனின் அடிப்பகுதி சாம்பல் அல்லது வெண்மையாக இருக்கும்.[3][12]

பரவலும், வாழ்விடமும்

தொகு
 
ஆஸ்திரேலியாவில் உள்ள இழுப்பா, இந்த இனத்தின் ஒப்பீட்டளவில் ஆரோக்கியமான எண்ணிக்கைக் கொண்ட ஒரே நாடு.[1]

உலகெங்கிலும் உள்ள வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல கடலோரப் பகுதிகளில் இழுப்பா மீன் காணப்படுகிறது. மேலும் இது நன்னீரிலும் நுழைகிறது கடலில் இருந்து 1,340 கிமீ (830 மைல்) தொலைவில் ஆறுகளில் காணப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[1] வரலாற்று ரீதியாக, இதன் கிழக்கு அட்லாண்டிக் எல்லை மூரித்தானியா முதல் அங்கோலா வரை இருந்தது.[1] மத்திய தரைக்கடலில் இருந்ததாக பழைய சான்றுகள் உள்ளன (கடைசியாக 1950 களின் பிற்பகுதியில் அல்லது சிறிது காலம் கழித்து) இவை பொதுவாக அலைந்து திரிபவையாகக் கருதப்படுகின்றன.[1][13] இதன் மேற்கு அட்லாண்டிக் எல்லை உருகுவே முதல் கரீபியக் கடல் மற்றும் மெக்சிகோ வளைகுடா வரை இருந்தது.[1] வரலாற்று ரீதியாக இது இந்தோ-பசிபிக் பகுதியில் தென்னாப்பிரிக்கா முதல் ஆப்ரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா வரை பரவலாக இருந்தது.[1] அதன் மொத்த பரவல் கிட்டத்தட்ட 7,200,000 km2 (2,800,000 sq mi) , மற்ற எந்த வாள் மீன்களையும் விட கூடுதல், ஆனால் இது அதன் வரலாற்று பகுதிகளில் இருந்து மறைந்துவிட்டது.[13]

இவற்றில் பெரிய மீன்கள் முதன்மையாக 25 மீ (82 அடி) ஆழத்தில் கழிமுகங்கள் மற்றும் கடல் நீரில் காணப்படுகின்றன.[14] ஆனால் பெரும்பாலும் 10 மீ (33 அடி) க்கும் குறைவான ஆழத்திலேயே காணப்படுகின்றன.[1][8] இருப்பினும், இவை பிற வாள் மீன் இனங்களைக் காட்டிலும் நன்னீர் வாழ்விடங்களில் அதிக அளவு பிணைப்பைக் கொண்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. நிக்கராகுவா ஏரியில் இழுப்பா மீன்களின் தொகையில் இருந்து வரும் கணக்கில் இருந்து இவை நன்னீரில் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை செலவழிப்பதாகத் தோன்றுகிறது [1] ஆனால் டேக்கிங் கணக்கெடுப்புகளில் இந்த ஏரிக்கும் கடலுக்கும் இடையில் குறைந்தபட்சம் சில இடம் பெயர்கின்றன என்பதைக் குறிக்கிறது.[8] இந்த மீன்களை பிடித்து வளர்த்து செய்யப்பட்ட ஆய்வுகளில் இந்த இன மீன்கள் உவர் மற்றும் நன்னீர் என இரண்டிலும் நீண்டகாலம் நன்கு வளரும் என்றும் தெரிகிறது. மேலும் இவை தண்ணீரிலிருந்து வெகுதூரம் குதிக்கக்கூடியவையாக உள்ளன; 1.8 மீட்டர் நீளமுள்ள (5.9 அடி) தனி மீன் 5 மீ (16 அடி) உயரம்வரை குதிக்கும்.[15] இது ஆறுகளில் மேல்நோக்கி நகரும் போது நடுத்தர அளவிலான அருவிகள் மற்றும் வேகமான பயணங்களின் தேவைக்காக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.[15] இவை பொதுவாக நீரின் அடியில் மணல், மண், வண்டல் போன்றவை கொண்ட தரைப்பகுதியில் காணப்படும்.[14] சகதில் தன் முள் கொம்பால் கிளறி இரை தேடும். இது விரும்பும் நீர் வெப்பநிலை 24 மற்றும் 32 °C (75–90 °F) ஆகும். மேலும் 19 °C (66 °F) அல்லது குளிர்ந்த வெப்பநிலை இதற்கு ஆபத்தானது.[15]

குறிப்புகள்

தொகு

 

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 Kyne, P.M.; Carlson, J.; Smith, K. (2013). "Pristis pristis". செம்பட்டியல் 2013: e.T18584848A18620395. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T18584848A18620395.en.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "IUCN" defined multiple times with different content
  2. 2.0 2.1 "{{{genus}}} {{{species}}}". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. {{{month}}} 2017 version. N.p.: FishBase, 2017.
  3. 3.0 3.1 3.2 3.3 Last; White; de Carvalho; Séret; Stehmann; Naylor (2016). Rays of the World. CSIRO. pp. 59–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780643109148.
  4. Robillard, M.; Séret, B. (2006). "Cultural importance and decline of sawfish (Pristidae) populations in West Africa". Cybium 30 (4): 23–30. 
  5. Fernandez-Carvalho; Imhoff; Faria; Carlson; Burgess (2013). "Status and the potential for extinction of the largetooth sawfish Pristis pristis in the Atlantic Ocean". Aquatic Conserv: Mar. Freshw. Ecosyst. 24 (4): 478–497. doi:10.1002/aqc.2394. 
  6. 6.0 6.1 Sullivan, T.; C. Elenberger (April 2012). "Largetooth Sawfish". University of Florida. பார்க்கப்பட்ட நாள் 11 November 2017.
  7. Nunes; Rincon; Piorski; Martins (2016). "Near-term embryos in a Pristis pristis (Elasmobranchii: Pristidae) from Brazil". Journal of Fish Biology 89 (1): 1112–1120. doi:10.1111/jfb.12946. பப்மெட்:27060457. 
  8. 8.0 8.1 8.2 Whitty, J.; N. Phillips. "Pristis pristis (Linnaeus, 1758)". Sawfish Conservation Society. Archived from the original on 18 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 17 November 2017. பிழை காட்டு: Invalid <ref> tag; name "SawfishCS" defined multiple times with different content
  9. Slaughter, Bob H.; Springer, Stewart (1968). "Replacement of Rostral Teeth in Sawfishes and Sawsharks". Copeia 1968 (3): 499–506. doi:10.2307/1442018. https://archive.org/details/sim_copeia_1968-08-31_3/page/n68. 
  10. Wueringer, B.E.; L. Squire Jr; S.P. Collin (2009). "The biology of extinct and extant sawfish (Batoidea: Sclerorhynchidae and Pristidae)". Rev Fish Biol Fisheries 19 (4): 445–464. doi:10.1007/s11160-009-9112-7. 
  11. Sawfish occasionally lose teeth during their life and these are not replaced.[9] Correct tooth count refers to actual teeth and alveoli ("tooth sockets") from lost teeth.[10]
  12. Kells, V.; K. Carpenter (2015). A Field Guide to Coastal Fishes from Texas to Maine. Johns Hopkins University Press. p. 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-9838-9.
  13. 13.0 13.1 Dulvy; Davidson; Kyne; Simpfendorfer; Harrison; Carlson; Fordham (2014). "Ghosts of the coast: global extinction risk and conservation of sawfishes". Aquatic Conserv: Mar. Freshw. Ecosyst. 26 (1): 134–153. doi:10.1002/aqc.2525. https://researchonline.jcu.edu.au/37738/6/37738%20Dulvy%20et%20al%202016.pdf. 
  14. 14.0 14.1 "Pristis pristis — Freshwater Sawfish, Largetooth Sawfish, River Sawfish, Leichhardt's Sawfish, Northern Sawfish". Department of the Environment and Energy. 2017. பார்க்கப்பட்ட நாள் 11 November 2017.
  15. 15.0 15.1 15.2 White, S.; K. Duke (2017). Smith; Warmolts; Thoney; Hueter; Murray; Ezcurra (eds.). Husbandry of sawfishes. Special Publication of the Ohio Biological Survey. pp. 75–85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86727-166-9. {{cite book}}: |work= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இழுப்பா&oldid=4174476" இலிருந்து மீள்விக்கப்பட்டது