இழைய-வளி விகிதம்

கதிர் மருத்துவத்தில் இழைய-வளி விகிதம் அல்லது திசு-வளி விகிதம் (Tissue-Air ratio, TAR, அல்லது Tissue to Air Ratio) என்பது உடல் மாதிரிப் பொருளில் (phantom) கதிர் மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கதிர் ஏற்பளவு வீதத்திற்கும் அதே தொலைவில் வளியில் கதிர் ஏற்பளவு வீதத்திற்கும் உள்ள விகிதமாகும்.[1][2]

பல புல அளவுகளுக்கும் இழையத்தில் பல ஆழங்களுக்கும் அளவீடுகள் எடுக்கப்படுகின்றன. இது கதிர் மருத்துவத்தில் கூடிய அளவில் பயன்படும் ஒரு காரணியாகும். பல ஆழத்திற்கும் பல புல அளவுகளுக்கும் இழைய-வளி விகிதம் அடங்கிய அட்டவணை உள்ளது.

திசு-வளி விகிதத்தைப் போல் திசு-மாதிரிப் பொருள் Tissue- Phantom Ratio, TPR) விகிதமும் கதிர் மருத்துவதில் கதிர்வீச்சிக் கால அளவினைக் காணப் பயன்படும் ஒரு முக்கிய காரணியாகும்.இது ஒரு குறிப்பிட்டத் தொலைவில் மாதிரிப் பொருளில் கணித்த ஏற்பளவிற்கும் அதேத் தொலைவில்அதே புள்ளியில் d செ.மீ.ஆழத்தில்,பெறப்பட்ட ஏற்பளவிற்குமுள்ள விகிதமாகும்.இந்த d செ.மீ. உச்ச ஏற்பளவினைக் கொடுக்கும் புள்ளியானால் திசு மாதிரிப் பொருள் விகிதமே விழுக்ககாட்டில் ஆழ ஏற்பளவாகும் (%DD).மருத்துவம் திட்டமிடலில் இவையாவும் முக்கிய காரணிகளாகும்.அனைத்திற்கும் அட்டவணைகள் உள்ளளன.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Johns H. E. and Cunningham J. R. (1983). The Physics of Radiology. Charles C. Thomas Publ.
  2. Hendee W., Ibbott G. and Hendee E. (2005). Radiation Therapy Physics. Wiley-Liss Publ. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-39493-9.
  • Dosimetry workbook
"https://ta.wikipedia.org/w/index.php?title=இழைய-வளி_விகிதம்&oldid=2824238" இலிருந்து மீள்விக்கப்பட்டது