இவளுக்கு இன்னொரு முகம் (நூல்)

இந்த “இவளுக்கு இன்னொரு முகம்” எனும் கதை நூல் 136 பக்கங்களுடன் இந்திய மதிப்பில் ரூபாய் 50 எனும் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

இவளுக்கு இன்னொரு முகம்
நூல் பெயர்:இவளுக்கு இன்னொரு முகம்
ஆசிரியர்(கள்):சேலம் ஆறுமுகன்
வகை:கதை
துறை:புதினம்
இடம்:பத்மினி பதிப்பகம்,
144, வி.எம்.ஆர்.நகர்,
மெய்யனூர்,
சேலம் -636 004.
மொழி:தமிழ்
பக்கங்கள்:136
பதிப்பகர்:பத்மினி பதிப்பகம்
பதிப்பு:நவம்பர்2008
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

நூலாசிரியர் தொகு

நூலாசிரியர் சேலம் ஆறுமுகன் சிறந்த படைப்பாளர். இவரது மூன்று படைப்புகள் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவியர்களால் ஆய்வு செய்யப்பட்டு "ஆய்வியல் நிறைஞர்" (எம்.ஃபில்) பட்டம் பெற்றிருக்கின்றனர். தமிழ்நாடு அரசின் "கலை முதுமணி" பட்டம் , ஈரோடு தமிழ்ச்சங்கம் வழங்கிய "தனித்தமிழ் பாவலர்" பட்டம் ஆகியவற்றையும் பெற்றிருக்கிறார். இவருடைய "பறவைக்குச் சிறகேது" எனும் நூல் நாகப்பன் இராஜம்மாள் இலக்கிய விருதும் பெற்றிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அணிந்துரை தொகு

இந்நூலுக்கு இனமானக் கவிஞர் அரிமா அவர்கள் அணிந்துரை வழங்கியிருக்கிறார்.

பொருளடக்கம் தொகு

வயதான காலத்தில் பெரியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் அடையும் துயரம் கொடுமையானது. அந்தக் கொடுமையில் இருக்கும் பெரிய பண்ணாடியான வேலப்ப பண்ணையார் எப்படி தன்னை விடுவித்துக் கொள்கிறார் என்பதைச் சொல்கிறது இந்தக்கதை.

வெளி இணைப்புகள் தொகு