இவோ ஜீமா சண்டை
இவோ ஜீமா சண்டை (Battle of Iwo Jima) ஐக்கிய அமெரிக்காவுக்கும் யப்பான் பேரரசுக்கும் இடையே 1945 ஆம் ஆண்டு பெப்ரவரி, மார்ச் மாதங்களில் இரண்டாம் உலகப்போரின் பசிபிக் போரின் ஒரு பகுதியாக நடைபெற்றது. டிடாச்மென்ட் நடவடிக்கை (Operation Detachment) என அழைக்கப்பட்ட இவ்வாக்கிரமிப்பு இவோ ஜீமா தீவில் காணப்பட்ட யப்பானிய வான்படைத் தளங்களை கைப்பற்றும் நோக்கில் ஐக்கிய அமெரிக்காவால் நடத்தப்பட்டது.
இவோ ஜீமா சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
2ஆம் உலகப்போர் (பசிபிக் போரின்) பகுதி | |||||||
சுறாபாச்சி மலைமீது அமெரிக்க கொடியேற்றம், பெப்ரவரி 23, 1945. ஜோ றொசெண்டன் / The Associated Press |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய அமெரிக்கா | சப்பான் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஒலண்ட் சுமித் | ததமிச்சி குரிபயசி † | ||||||
பலம் | |||||||
110,000 | 21,000 | ||||||
இழப்புகள் | |||||||
6,821 dead 19,189 wounded,[1] 494 missing[1] Total: 26,504 | 20,703 dead,[1] 216 captured[1] Total: 20,919 |
இச்சண்டையானது இந்நடவடிக்கைகளின் போதான மிகக் கடுமையான மோதல்களை கொண்டிருந்தது. யப்பானிய இராச்சியப்ப்படைகளின் நிலைகளானது நன்றாக காக்கப்பட்டவையாகவும், பாரிய பதுங்கு குழிகளைக் கொண்டும், மறைக்கப்பட்ட ஆட்டிலரித் தளங்களையும், மொத்தம் 18 கிலோமீட்டர் (11 மைல்) நீளமான குகைவழிகளையும் கொண்டு பலமாக அமைக்கப்பட்டிருந்தது.[2][3] இச்சண்டையானது யப்பானிய மண்ணில் நடைபெற்ற முதற் சண்டையாதாலாம் யப்பானிய படைகள் தமது நிலைகளை கடும்சமரிட்டு காத்தனர். தளத்தில் இருந்த 21,000 யப்பானிய படைகளில் 20,000 பேர் களச்சாவடைந்தனர் மேலும் 216 பேர் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.[1]
ஜோ றொசெண்டன் என்ற படப்பிடிப்பாளர் ஐக்கிய அமெரிக்க ஈருடக படையினர் 5 பேரும், ஐக்கிய அமெரிக்க கடற்படை வீரர் ஒருவரும் சேர்ந்து 166 மீட்டர் (546 அடி) உயரமான சுறபாச்சி மலை மீது ஐக்கிய அமெரிக்க கொடியை ஏறுவதை படம் பிடித்தார். இப்படமானது 35 நீடித்த இச்சண்டையின் 5வது நாள் சுறாபாச்சி மலை மீது ஏற்றப்பட்ட இரண்டாம் கொடியேற்றத்தை சித்தரிக்கிறது. இப்படமானது மிகப்பிரசித்தமானதுடன் மிக அதிகளவில் பிரதியெடுக்கப்பட்ட படமாகவும் விளங்குகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Morison, Samuel Eliot (2002) [1960]. Victory in the Pacific, 1945, vol. 14 of History of United States Naval Operations in World War II. Urbana, Ill.: University of Illinois Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0252070658. இணையக் கணினி நூலக மைய எண் 49784806.
- ↑ http://www.worldwar2database.com/html/letters_from_iwo_jima.htm
- ↑ http://www.battle-fleet.com/pw/his/Battle-Iwo-Jima-Defense.htm
- ↑ Landsberg, Mitchell (1995). "Fifty Years Later, Iwo Jima Photographer Fights His Own Battle". அசோசியேட்டட் பிரெசு இம் மூலத்தில் இருந்து 2004-04-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040412081346/http://www.ap.org/pages/about/pulitzer/rosenthal.html. பார்த்த நாள்: 2007-09-11.
24°47′N 141°19′E / 24.783°N 141.317°E