இ. இரத்தினசபாபதி
இ. இரத்தினசபாபதி (1938 - 12 திசம்பர் 2006), மார்க்சிய-லெனினிய இடதுசாரி அரசியல்வாதியும், ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்ற ஈழப்போராட்ட அமைப்பை நிறுவியவரும் ஆவார்.[1][2]
வாழ்க்கைக் குறிப்பு
தொகு1938 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், இணுவில் கிராமத்தில் பிறந்த இளையதம்பி இரத்தினசபாபதி பத்திரிகைத்துறையிலும், இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இலங்கை இனப்பிரச்சினை தொடக்கக் கட்டத்தில் இருந்தபோது ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தார். நீண்ட காலமாக இலண்டனில் வாழ்ந்து வந்த போதும் மார்க்சிய சிந்தனையிலும், இலங்கைத் தமிழர்களின் அரசியலிலும், உலக அரசியல் போராட்டங்களிலும் தீவிர நாட்டம் கொண்டவராக விளங்கினார்.
ஈரோஸ் என அழைக்கப்பட்ட ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் 1975 சனவரி 3 இல் இலண்டனில் உள்ள வாண்ட்சுவொர்த் நகரில் இரத்தினசபாபதியில் இல்லத்தில் இரத்தினசபாபதி, சங்கர் ராஜி, க. வே. பாலகுமாரன் ஆகிய மூன்று பேர் கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட தலைமையின் கீழ் தொடங்கப்பட்டது. பலத்தீன விடுதலை இயக்கம், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போன்ற விடுதலை அமைப்புகளுடன் உறவுகளைப் பேணி வந்தார். ஈரோஸ் தனது பலத்தீன விடுதலை இயக்கம் உடனான தொடர்புகளின் மூலம் பின்னர் ஈரோசின் தலைவரான அருளர் என்ற அருள்பிரகாசம் உட்படப் பலரை லெபனானில் கொரில்லா தந்திரங்களில் பயிற்சி பெற அனுப்பியது.
இரத்தினசபாபதி 1989 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஈழவர் சனநாயக முன்னணி என்ற ஈரோசின் அரசியல் கட்சியின் ஒன்பது உறுப்பினர்களுடன் இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் இவர் சார்ந்த ஈழவர் சனநாயக முன்னணி நாடாளுமன்ற நடவடிக்கைகளில் சிறிது காலம் பங்கேற்றபின் விலகிக்கொண்டது.[3][2]
இரட்ணா என்றழைக்கப்படும் இரத்தினசபாபதி லண்டனில் உள்ள மருத்துவமனையொன்றில் 2006 திசம்பர் 12 காலையில் காலமானார்.[2]
இரத்தினசபாபதி ஆற்றிய உரை
தொகுஇலங்கைப் பாராளுமன்றத்தில், ஈழவர் ஜனநாயக முன்னணி உறுப்பினர்களின் பிரவேசத்தின் பின் 21.07.89 அன்று சபையில் ஈரோஸ் நிலைப்பாடு பற்றி இரத்தினசபாபதி உரையாற்றினார். அந்த உரையில் அவரின் நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டன.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- http://www.gandhiyam.com/ பரணிடப்பட்டது 2007-03-06 at the வந்தவழி இயந்திரம் காந்தீயம்
- விக்கிநூலில் இரத்தினசபாபதி ஆற்றிய உரை