சங்கர் ராஜி

சங்கர் ராஜி என்ற இயக்கப்பெயரால் அறியப்படும் நேசதுரை திருநேசன் ( இலங்கைத் தமிழ்ப் போராளியும் ஈழ இயக்கங்களி்ல் ஒன்றான ஈழப்புரட்சி அமைப்பின் (ஈரோஸ்) நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் ஆவார். இவர் அபுஜீகாத் எனும் நூலையும் எழுதியிருக்கின்றார்.

சங்கர் ராஜி
பிறப்புநேசதுரை திருநேசன்
(1949-11-11)11 நவம்பர் 1949
உரும்பிராய், யாழ்ப்பாணம்
இறப்பு10 சனவரி 2005(2005-01-10) (அகவை 55)
லண்டன், இங்கிலாந்து
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்விவிவசாய பொறியியல், இயந்திர பொறியல்
பணிபொறியியலாளர்
செயற்பாட்டுக்
காலம்
1975- 2003
அறியப்படுவதுஈரோஸ் நிறுவனர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்அபுஜீகாத்(நூல்)
அரசியல் கட்சிஈழவர் சனநாயக முன்னணி
அரசியல் இயக்கம்ஈழப் புரட்சி அமைப்பு
பெற்றோர்மாணிக்கம் நேசதுரை, பொற்கொடி
வாழ்க்கைத்
துணை
நிர்மலா
பிள்ளைகள்நேசன், ரஜினி, நிரஞ்சனி

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

சங்கர் ராஜி 1949 நவம்பர் 11 இல்[1] இலங்கையின் வடமாகாணத்திலிலுள்ள யாழ்ப்பாணத்தில்.[2] உரும்பிராய் எனும் ஊரில் மாணிக்கம் நேசதுரை, பொற்கொடி தம்பதிகளின் மூத்த பிள்ளையாக பிறந்தார்..[3][4] சங்கர் ராஜி சிறுபராயத்தில் கொழும்பில் வசித்து வந்தார்.[2]

1958 ஆம் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட சங்கர் ராஜியின் குடும்பம் ஏனைய பெரும்பாலான தமிழ் குடும்பங்களைப் போலவே தமிழர் பிரதேசமான வடபகுதிக்கு இடம்பெயர்ந்தது.[2] 1966 ஆம் ஆண்டு சங்கர் ராஜியின் குடும்பம் மீண்டும் கொழும்பிற்கு திரும்பியது. ஆனால் சங்கர் ராஜி கொழும்பிற்கு செல்லாமல் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார்.[2] இலண்டன் நகரில் வேளாண்மைப் பொறியியல் மற்றும் தானுந்து பொறியியல் பட்டப்படிப்பு படித்தார்.[2] பட்டப்படிப்பின் பின் போர்ட் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனத்தில் பொறியியலாளராக வேலை செய்தார்.[5]

1976ஆம் ஆண்டு லண்டனில் நிர்மலா என்பவரை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு நேசன்,ரஜினி, நிரஞ்சனி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.[3][4]

அரசியல் வாழ்க்கை

தொகு

சங்கர் ராஜி 1975 ஆம் ஆண்டு இ. இரத்தினசபாபதி, வே. பாலகுமாரன், பாலநடராஜ ஐயர், அருட்பிரகாசம் ஆகியோருடன் இணைந்து ஈழ புரட்சிகர மாணவர் இயக்கத்தை நிறுவுவதில் பங்குகொண்டார்.[5] அதன் பின்னர் போர்ட் நிறுவனத்தின் பொறியியலாளர் வேலையைத் துறந்து, பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றுக்கொண்டு,[5] இலங்கை திரும்பி முழுநேர அரசியல் செயற்பாடுகளி்ல் ஈடுப்பட்டார்.

ஈழப்புரட்சி அமைப்பின் பொதுக்குழுவிலும், அமைப்பின் புரட்சிகர நிறைவேற்றுக்குழுவிலும் உறுப்பினராக இருந்த சங்கர் ராஜி, ஈரோசின் ஆயுதப்பிரிவிற்கும் பொறுப்பாகவிருந்தார்.[5]

1984 ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களின் சூத்திரதாரியாக செயற்பட்ட காரணத்தினால், சிஜஏ உளவு நிறுவனத்தினால் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.[2] 1985 ஆம் ஆண்டு நடைபெற்ற திம்பு பேச்சுவார்த்தையில் ஈரோஸ் அமைப்பின் பிரதிநிதியாக கலந்துக்கொண்டார்.[5]

1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அழுத்தம் காரணமாக ஈரோஸ் அமைப்பு கலைக்கப்படுவதாகவும், உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படலாம் என்று ஈரோசின் பொதுச்செயலாளர் வே. பாலகுமாரன் அறிவித்ததை தொடர்ந்து, பெரும்பாலான உறுப்பினர்கள் வே. பாலக்குமாரனின் தலைமையில் விடுதலைப்புலிகளுடன் இணைந்துக்கொண்டனர்.[6] சிலர் குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பினர். சங்கர் ராஜி ஈரோஸ் அமைப்பை தொடர்ந்து செயற்படுத்துவதற்கு முடிவெடுத்தார். பின்னர் கொழும்பு சென்ற சங்கர் ராஜி, சுதா மாஸ்டர் என்பவருடன் இணைந்து ஈரோஸ் அமைப்பை செயற்படுத்தும் முயற்சிகளில் ஈடுப்பட்டார்.[6] ஈரோஸ் அமைப்பு அரசு-ஆதரவுக் குழுவாகவும், புலிகளுக்கு எதிரான துணை இராணுவக் குழுவாகவும், ஓர் அரசியல் கட்சியாகவும் செயல்பட்டது.[7] ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) போன்ற ஏனைய அரசு-சார்பு துணை இராணுவக் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டது.[6]

சங்கர் ராஜி சென்னையில் வாழ்ந்து வந்தார். கொழும்பில் ஈரோசின் நடவடிக்கைகளி சுதா மாஸ்டர் கவனித்து வந்தார்.[6] 1997 ஆம் ஆண்டு வெளிநாட்டு நாணயங்கள் கடத்திய குற்றச்சாட்டில் சென்னையில் கைதுசெய்யப்பட்ட சங்கர் ராஜி, ஓராண்டு சிறை தண்டனைக்குள்ளானார்.[1][6] இலங்கை திரும்பிய சங்கர் ராஜி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சின் கீழிருந்த அரசுத் திணைக்களம் ஒன்றில் ஆலோசகராகப் பணியாற்றினார்.[1][8]

இறப்பு

தொகு

விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் 2002 போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தான பின் இலண்டன் திரும்பிய சங்கர் ராஜி 2005 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.[3][4][5][9] ஈரோஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை அவரது மகன் நேசன் சங்கர் ராஜி ஏற்றுக் கொண்டுள்ளார்.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Struggle for Tamil Eelam: Shankar Rajee - Founder-member of EROS". Tamil Nation.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Meadows, Mark Stephen (29 June 2009). "Tea With Terrorist". Sri Lanka Guardian. http://www.srilankaguardian.org/2009/06/we-took-some-tea-as-symbol.html. 
  3. 3.0 3.1 3.2 "Obituaries". Tamil Times XXIV (2): 36. பெப்ரவரி 2005. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://noolaham.net/project/37/3645/3645.pdf. 
  4. 4.0 4.1 4.2 "Obituaries". டெய்லிநியூஸ். 13 சனவரி 2005. http://archives.dailynews.lk/2005/01/13/obits.html. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Sambandan, V. S. (11 சனவரி 2005). "EROS founder member dead". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2016-01-15 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20160115015028/http://www.thehindu.com/2005/01/11/stories/2005011101701400.htm. 
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 "EROS files nominations for PC elections". தமிழ்நெட். 7 December 1998. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=2443. 
  7. Parashar, Swati (2014). Women and Militant Wars: The Politics of Injury. Routledge. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134116065.
  8. de Silva, Neville (19 டிசம்பர் 2005). "Tamil Community shocked by another abduction revelation". ஏசியன் டிரிபியூன். http://asiantribune.com/news/2005/12/19/tamil-community-shocked-another-abduction-revelation. 
  9. "Shankar Raji dies". தமிழ்நெட். 10 January 2005. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=13931. 
  10. Lansford, Tom, ed. (2015). Political Handbook of the World 2015. CQ Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1483371557.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_ராஜி&oldid=4068281" இலிருந்து மீள்விக்கப்பட்டது