ஈசன் (திரைப்படம்)

சசிகுமார் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஈசன் (Essan). 2010 இல் வெளிவந்தத் தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் எம். சசிகுமார் தன்னுடைய முதல் படமான சுப்ரமணியபுரம். படத்தின் வெற்றிற்குப் பிறகு இரண்டாவது படமாக அவரே இதை தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, வைபவ், தயாரிப்பாளர் ஏ. எல். அழகப்பன், அபினயா, அபர்ணா பாஜ்பாயி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், பல புதுமுகங்களும் நடித்துள்ளனர்.[1] ஈசன் என்ற பெயருக்கு முன்னர் இப்படத்திற்கு நகரம் அல்லது ஆகச்சிறந்தவன் என்ற பெயர் வைக்க திட்டமிடப்பட்டது.[2][3][4][5] இது 2010 டிசம்பர் மாதம் 17 ந்தேதி வெளிவந்தது.

ஈசன்
இயக்கம்சமுத்திரக்கனி
தயாரிப்புஎம். சசிகுமார்
கதைஷ்ரேயா
இசைஜேம்ஸ் வசந்தன்
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ். ஆர். கதிர்
படத்தொகுப்புஏ. எல். ரமேஷ்
கலையகம்கம்பெனி புரடக்‌ஷன்ஸ்
விநியோகம்கம்பெனி புரடக்‌ஷன்ஸ்
வெளியீடு17 திசம்பர் 2010 (2010-12-17)
ஓட்டம்164 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்16 crore

கதைச்சுருக்கம்

தொகு

ஒரு விடுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியான நடனத்தில் ஈடுபட்டுள்ளனர், அங்கே செழியனால் (வைபவ் ரெட்டி) நடந்த சண்டையில் ஒரு பெண்ணின் மரணம் சம்பவிக்கிறது. செழியனின் (வைபவ் ரெட்டி) செல்வாக்கின் காரணமாக, அப்பகுதியின் காவல்துறை உதவி ஆணையர் சங்கைய்யா (சமுத்திரகனி), இவ்வழக்கினை திரும்பப் பெற தள்ளப்படுகிறார். செழியன் மற்றும் அவனது நண்பர்கள் பல கொலைகள் செய்தாலும் ஊழல் அரசியல்வாதியான செழியனின் அவனது தந்தை தெய்வக நாயகம் தனது பதவியை பயன்படுத்தி அவர்களை பிணையில் எடுத்து விடுவார்.

செழியன் கர்நாடகவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் ரேஷ்மா (அபர்ணா பாஜ்பாயி) என்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறான். இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் ஒப்புக் கொள்வதற்கு முன்னர் சில அரசியல் நாடகங்கள் நடைபெறுகின்றன. இந்த அரசியல் நாடகத்தில் சங்கைய்யா தான் பயன்படுத்தப்பட்டதை அறிந்து கோபமடைகிறார், ஆனாலும் அவருடைய மேல் அலுவலரால் தடுக்கப்படுகிறார். இந்நிலையில் செழியன் மர்மமான முறையில் கடத்தப்படுகிறார். இது குறித்து அதிகாரப் பூர்வமற்ற விசாரணையை சங்கைய்யா தொடங்க, அதன் முடிவில் பதினோராம் வகுப்பு படிக்கும் ஈசன் என்ற மாணவன் இதில் ஈடுபட்டிருப்பதை கண்டறிகிறார்.

ஈசனின் தந்தை அவர்களுடைய சொந்த கிராமத்தில் அரசாங்க ஊழியராக இருக்கிறார், அவனுக்கு பள்ளியில் படிக்கும் பூரணி என்ற வாய் பேச முடியாத சகோதரி (அபிநயா) இருக்கிறாள். பூரணி தனது படிப்பு முடிந்ததும், மேற்படிப்பினைத் தொடர சென்னை செல்கிறாள். பூரணியின் வகுப்பு தோழிகள் அனைவரும் பணக்காரர்களாகவும், மதுவிற்கு அடிமையானவரகளாகவும் இருக்கிறார்கள். அவள் தனது வகுப்பு தோழிகளால் ஒரு விருந்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறாள், அங்கே செழியன் மற்றும் அவரது நண்பர் வினோத் ஆகியோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். ஈசன் குடும்பத்தினரால் இச்சம்பவத்தை சமாளிக்க இயலாமல், அனைவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். விஷம் கலந்த காபியை சிறிய அளவில் பருகியதால் ஈசன் உயிர் பிழைக்கிறான்.

பூரணியின் தோழி சியாமளா அவனைச் சந்தித்து என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துகிறாள். அவன் சகோதரியின் மேல் கொண்ட பாசம் காரணமாக, குற்றவாளிகளை பழிவாங்க தீர்மானிக்கிறான். கணினி தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆன்லைன் மூலம் மருந்தினை மாற்றி வினோத் மருத்துவ விபத்தில் இறந்தவிட்டதாக சித்தரித்து கொல்லப்படுகிறான். மேலும் செழியனை கடத்திச் சென்று தாக்குகிறான் என விசாரணையின் மூலம் ஈசனின் கதை சங்கையாவிற்கு தெரியவருகிறது. அங்கே வந்த தெய்வ நாயகமும் அவரது உதவியாளரும் செழியனின் இறந்த உடலை காண்கின்றனர். அவர்கள் சங்கைய்யாவை தாக்கி, ஈசனை நெருப்பில் தள்ளிவிட முயல்கின்றனர். சங்கைய்யா, அவர்களை துப்பாக்கியால் சுட்டு ஈசனை காப்பாற்றுகிறார். இறுதியாக ஈசன் சீர்திருத்த மையத்தில் அனுமதிக்கப்படுகிறார். சங்கையா ஈசனின் குடும்பத்தாரை சந்திக்கிறார்.

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

நடிகர் விக்ரம் 2009 ல் தனது சொந்தத் தயாரிப்பில் இப்படத்தை ஆரம்பித்தார். 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்னர் படத்தின் செலவுகள் அதிகரித்ததால், இதிலிருந்து விலகிக் கொண்டார்.[6] பின்னர், இறுதியில் அவரிடமிருந்து வாங்கி இயக்குநர் சசிகுமார் படத்தை முடித்து வெளியிட்டார்.[7]

ஒலிப்பதிவு

தொகு

ஈசன் படத்தின் இசைத் தொகுப்பானது சுப்பிரமணியபுரம் படத்திற்காக எம். சசிகுமார் உடன் பணியாற்றிய ஜேம்ஸ் வசந்தன் என்பவரால் இசையமைக்கப்பட்டது. பாடல் வெளியீட்டு விழா 2010 நவம்பர் 19 அன்று, சென்னையில் சத்யம் சினிமாஸில் நடைபெற்றது. இந்தியத் திரைப்பட பிரபலங்களான கே. பாலச்சந்தர், பாலா மற்றும் அமீர் சுல்தான் மலையாள இயக்குநர் ரஞ்சித், தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மற்றும் கன்னட இயக்குநர் யோகராஜ் பட் போன்றோர் அவ்விழாவில் பங்கேற்றனர். [8][9]

மேற்கோள்கள்

தொகு
  1. MANIGANDAN K R I, TNN (2010-10-21). "'We parted as good friends'". The Times of India. Archived from the original on 2012-11-04. பார்க்கப்பட்ட நாள் 2012-10-04. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Sasikumar film is called 'Easan' - Tamil Movie News". IndiaGlitz. 2010-10-19. பார்க்கப்பட்ட நாள் 2012-10-04.
  3. S. R. Ashok Kumar (2010-10-21). "Arts / Cinema : The call of the city". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2012-10-04.
  4. "Easan — Tamil Movie News — Sasikumar announces his new movie — Easan | Sasikumar | Samudrakani | Vikram | Abhinaya". Behindwoods.com. 2010-10-19. பார்க்கப்பட்ட நாள் 2012-10-04.
  5. "Sasikumar is back with Easan". Sify.com. 2010-10-20. பார்க்கப்பட்ட நாள் 2012-10-04.
  6. "Vikram starts his Sasikumar film!". சிஃபி. 19 November 2009. Archived from the original on 19 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 31 July 2011. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  7. "Sasikumar and Vikram part ways". Behindwoods. 6 September 2010. பார்க்கப்பட்ட நாள் 31 July 2011.
  8. "Sasikumar's Easan audio to be innovative". Sify.com. 2010-11-16. பார்க்கப்பட்ட நாள் 2012-10-04.
  9. "Events - 'Easan' Audio Invite". IndiaGlitz. 2010-11-18. பார்க்கப்பட்ட நாள் 2012-10-04.

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈசன்_(திரைப்படம்)&oldid=4158999" இலிருந்து மீள்விக்கப்பட்டது