ஈசான வம்சம்
ஈசான வம்சம் (Ishana dynasty) இந்தோனீசியாவிலுள்ள சாவகத்தீவில் ஆட்சி செய்த மாதரம் இராச்சியத்தின் இந்து ஆட்சியாளர்கள் ஆவர். இது சஞ்சய வம்சத்தைத் தொடர்ந்து, பொச. 929 ஆம் ஆண்டில் நடு சாவகத்திலிலிருந்து கிழக்கு சாவகத்திற்கு மாதரம் இராச்சியத்தின் தலைநகரை மாற்றிய மபு சிந்தோக் என்பவரால் நிறுவப்பட்டது.
வரலாற்றாளர் கோடெஸ் கூறுகிறார், "சிந்தோக், தனது ஆட்சியின் பெயரான சிறீ ஈசான விக்ரமதர்மதுங்கதேவன், தீவின் கிழக்கில் சாவக சக்தியின் நிறுவனராக எப்போதும் கருதப்பட்டார்" என்கிறார். மபு சிந்தீக்கின் மகளும் வாரிசுமான ஈசானதுங்கவிஜயா, அவருக்குப் பின் அவரது மகன் மகுடவம்சவர்தனும், அதைத் தொடர்ந்து தர்மவாங்சாவும் பதவியேற்றனர்.
பொது
தொகு1016-1017ல் சிறீவிஜயப் பேரரசு தலைநகரைத் தாக்கி அழித்தபோது ஈசான வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது. [1] :128–130
இறுதியில், ஆட்சியாளர் ஏர்லாங்கா இராச்சியத்தை மீட்டெடுத்து, ககுரிபன் என பெயரிட்டு மீண்டும் இணைத்தார். ஏர்லாங்காவின் வாரிசுகள் கேதிரி இராச்சியத்தை ஆட்சி செய்தனர். மேலும் இவர்கள் ஈசான வம்சத்தின் தொடர்ச்சியாக கருதப்படுகிறார்கள்.
இதனையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824803681.