ஈசுவர் குப்தா பாலம்

மேற்கு வங்கத்தில் ஊக்ளி ஆற்றின் குறுக்கே உள்ள சாலைப் பாலம்

ஈசுவர் குப்தா பாலம் (Ishwar Gupta Setu) இந்தியாவின் மேற்கு வங்கத்தில் பான்சுபீரியா நகரில் அமைந்துள்ளது. 1056.25 மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலைப் பாலம் மேற்கு வங்காளத்தில் பான்சுபீரியா, ஊக்ளி, கல்யாணி, நாடியா நகரங்களீல் ஊக்ளி ஆற்றைக் கடக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 12 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 19 ஆகியவற்றை இணைப்பதன் மூலம் கல்யாணி விரைவுச்சாலை இப்பாலத்தை கடக்கிறது. [1]

ஈசுவர் குப்தா பாலம்
கல்யாணி-பான்சுபீரியா பாலம்
2022 ஆம் ஆண்டில் ஈசுவர் குப்தா பாலம்
அதிகாரப் பூர்வ பெயர் முதலாவது ஈசுவர் குப்தா பாலம்
பிற பெயர்கள் கல்யாணி பாலம்
போக்குவரத்து மோட்டார் வாகனங்கள், நடைபாதைவாசிகள், மிதிவண்டி ஓட்டுநர்கள்
தாண்டுவது ஊக்லி ஆறு
இடம் பான்சுபெரியா, ஊக்ளி, மேற்கு வங்காளம், இந்தியா
பராமரிப்பு பொதுப்பணித்துறை (சாலைகள்) பிப்புல்பட்டி, ஊக்ளி கோட்டம்-II
வடிவமைப்பு சமப்படுத்தப்பட்ட கொடுங்கை பாலம்
கட்டுமானப் பொருள் கற்காரை
மொத்த நீளம் 1,056.25 m (3,465.4 அடி)
திறப்பு நாள் 1989 (1989)
அமைவு 22°58′2″N 88°24′27″E / 22.96722°N 88.40750°E / 22.96722; 88.40750

வரலாறு

தொகு

ஈசுவர் குப்தா பாலம் புகழ்பெற்ற கவிஞர் ஈசுவர் சந்திர குப்தாவின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த பாலம் கட்டும் நடவடிக்கை 1978 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஊக்ளி மற்றும் நாடியா மாவட்டத்தின் போக்குவரத்தை குறைக்க 1981-1989 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கட்டப்பட்டது.. 1989 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதியன்று மேற்கு வங்க முன்னாள் முதல்வர் சோதிபாசு கல்யாணி நகரத்தில் பாலத்தை திறந்து வைத்தார். [2] [3] தற்போதுள்ள பாலம் சேதமடைந்ததால், மேற்கு வங்க நெடுஞ்சாலை மேம்பாட்டுக் கழகத்தால் புதிய ஈசுவர் குப்தா பாலம் கட்டப்பட்டு வருகிறது. [4]

படக்காட்சி

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Millennium-Post. "Construction of Iswar Gupta Setu to commence soon". www.millenniumpost.in. பார்க்கப்பட்ட நாள் 2019-02-15.
  2. Network, N. F. N. "Ishwar Gupta Bridge Closed Again After Fresh Cracks". News from Nadia (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.
  3. "36 years on, price of strike catches up". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.
  4. Network, N. F. N. "New Ishwar Gupta Bridge To Add Beauty To 21Km Long Mogra-Barojaguli Flyover". News from Nadia (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈசுவர்_குப்தா_பாலம்&oldid=4139955" இலிருந்து மீள்விக்கப்பட்டது