ஈடித் கிராஸ்மன்

அமெரிக்க மொழிபெயர்ப்பாளர்

ஈடித் மரியன் கிராஸ்மன் (Edith Grossman, 22, மார்ச், 1936 - 4, செப்டம்பர், 2023) என்பவர் ஒரு அமெரிக்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் லத்தீன் அமெரிக்க மற்றும் எசுபானிய இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததற்காக அறியப்படுகிறார். இவர் நோபல் பரிசு பெற்ற மாரியோ பார்க்காசு யோசா, நோபல் பரிசு பெற்ற கபிரியேல் கார்சியா மார்க்கேஸ், மைரா மான்டெரோ , அகஸ்டோ மான்டெரோசோ, ஜெய்ம் மன்ரிக், ஜூலியன் டி சியோஸ், அல்வாரோ மிகெல் தே செர்வாந்தேஸ் ஆகியோரின் படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். [1] இவர் மொழிபெயர்ப்பிற்கான PEN/Ralph Manheim பதக்கம் மற்றும் மொழிபெயர்ப்புக்கான 2022 Thornton Wilder பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்.

ஈடித் கிராஸ்மன்
2012 இல் ஈடித் கிராஸ்மன்
2012 இல் ஈடித் கிராஸ்மன்
பிறப்புஈடித் மரியன் டோர்ப்
(1936-03-22)மார்ச்சு 22, 1936
பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்கா
இறப்புசெப்டம்பர் 4, 2023(2023-09-04) (அகவை 87)
நியூயார்க் நகரம், அமெரிக்கா
தொழில்மொழிபெயர்ப்பாளர்
கல்வி
துணைவர்
Norman Grossman
(தி. 1965; ம.மு. 1984)
பிள்ளைகள்2

வாழ்க்கை

தொகு

அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் பிலடெல்பியாவில் பிறந்த எடித் மரியன் டோர்ஃப், கிராஸ்மன் பிற்காலத்தில் நியூயார்க் நகரில் வாழ்ந்தார். [2] இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எசுபானிய மொழியில் இளங்கலையும், எசுபானிய இலக்கியத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சிலி "எதிர்ப்பு கவிஞர்" நிக்கானோர் பர்ரா பற்றிய ஆய்வுசெய்து முனைவர் பட்டத்தைப் பெற்றார். [3] [4] இவர் தனது தொழில் வாழ்க்கையின் துவக்கத்தில் நியூயார்க் பல்கலைக் கழகம் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார். [2] 1972 ஆம் ஆண்டு, ஜோ-ஆன் ஏங்கல்பெர்ட் என்பவர், அர்ஜென்டினாவின் அவாண்ட்-கார்ட் எழுத்தாளர் மாசிடோனியோ பெர்னாண்டசின் சிறுகதையை ஒரு இலக்கியத் தொகுப்பிற்காக மொழிபெயர்த்துத் தரும்படி இவரிடம் கேட்டபிறகு இவரது மொழிபெயர் வாழ்க்கை தொடங்கியது. [5] அதன் பிறகு கிராஸ்மன் தனது பணியின் கவனத்தை கற்பித்தல், திறனாய்வு போன்றவற்றிலிருந்து மொழிபெயர்ப்புக்குத் திருப்பினார். [6] அதன்படி 1990 இல், முழுநேரமும் மொழிபெயர்ப்பு பணியில் தனது கவனத்தைச் செலுத்த கற்பித்தல் பணியைக் கைவிட்டார். [7]

கிராஸ்மன் அவரது நண்பர்களிடையே "எடி" என்று அறியப்பட்டார். [4] இவர் 1965 இல் நார்மன் கிராஸ்மேனை மணந்தார். இணையருக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். ஆனால் 1984 இல் இருவரும் மணவிலக்குப் பெற்றனர். எடித் கிராஸ்மன் கணைய புற்றுநோயால் 2023, செப்டம்பர், 4 அன்று மன்ஹாட்டனில் உள்ள தனது வீட்டில் இறந்தார். [2]

தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்புகள்

தொகு

40 ஆண்டுகளுக்கும் மேலாக, கிராஸ்மன் சுமார் 60 புத்தகங்களை எசுபானிய மொழியிலிருந்து மொழிபெயர்த்தார். [4]

மிகெல் தே செர்வாந்தேஸ் :

கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்:

மாரியோ பார்க்காசு யோசா:

ஏரியல் டோர்ஃப்மேன்:

மைரா மான்டெரோ:

அல்வாரோ முடிஸ்:

பிற மொழிபெயர்ப்புகள்:

கட்டுரை:

மேற்கோள்கள்

தொகு
  1. Hecht, Randy B.. "Interview with Edith Grossman, translator". AARP. https://www.aarp.org/entertainment/books/info-2006/translator_edith_grossman.html. 
  2. 2.0 2.1 2.2 Chace, Rebecca (September 4, 2023). "Edith Grossman, Who Elevated the Art of Translation, Dies at 87". https://www.nytimes.com/2023/09/04/books/edith-grossman-dead.html. Chace, Rebecca (September 4, 2023). "Edith Grossman, Who Elevated the Art of Translation, Dies at 87". The New York Times. Retrieved September 4, 2023.
  3. "Why translation matters to Edith Grossman". பார்க்கப்பட்ட நாள் September 7, 2023.
  4. 4.0 4.1 4.2 Goyeneche, Teresita (October 2, 2019). "Edith Grossman: la traductora que conectó América Latina con Estados Unidos". Vice. https://www.vice.com/es/article/d3a4ya/a-edith-grossman-pasaporte-literario-de-america-latina-a-estados-unidos-no-le-gusta-viajar. Goyeneche, Teresita (October 2, 2019). "Edith Grossman: la traductora que conectó América Latina con Estados Unidos". Vice. Retrieved September 7, 2023.
  5. "Gabriel Garcia Marquez's Translator Speaks up for Translations". பார்க்கப்பட்ட நாள் April 19, 2014.
  6. "Edith Grossman, acclaimed translator, dies at 87". https://www.theguardian.com/books/2023/sep/05/edith-grossman-acclaimed-translator-dies-at-87. 
  7. "Lecture: "Translating Cervantes"". பார்க்கப்பட்ட நாள் September 6, 2023.
  8. nobel.org

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈடித்_கிராஸ்மன்&oldid=3916589" இலிருந்து மீள்விக்கப்பட்டது