ஈயக் குண்டு
குண்டு என்பது ஈயத்தால் ஆன சிறு-அளவில் உள்ள பந்துகள்/உருண்டைகள் ஆகும். சிதறு துமுக்கிகளில் இவை எறியமாக உபயோகிக்கப்படுகிறது.
உற்பத்தி
தொகுஉருக்கிய ஈயம் கோபுரத்தின் உச்சியில் இருந்து ஊற்றப்படும். பெரும்பாலான திரவங்களைப் போல, உருகிய ஈயத்தை உருண்டையான துளிகளாக மேற்பரப்பு இழுவிசை ஆக்குகிறது. கோபுரம் போதுமான உயரம் இருப்பின், வீழ்ச்சியின் போதே ஈயத் துளிகள் கெட்டியாகிவிடும். இவ்வாறு அந்த உருண்டை வடிவை தக்க வைத்துக் கொள்கிறது ஈயம். விழுந்தவுடனே ஈயத்தைக் குளிர்விக்க, கோபுரத்தின் அடியில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும்.
ஈயத்துடன் வெவ்வேறு அலகுகளில் வெள்ளீயம், அந்திமனி, மற்றும் ஆர்சனிக் போன்றவற்றை சேர்த்து கலப்புலோகமாக மாற்றுவதால், ஈய குண்டின் கடினம் மாற்ற இயலும்.[1]
அளவுகள்
தொகுதேவைக்கேற்ப குண்டு பல அளவுகளில் உள்ளன. குண்டின் அளவுகளை எளிதாக கண்டறிய ஒவ்வொரு அளவிற்கும், ஒர் எண் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஈயக் குண்டின் ஒப்பீட்டு அட்டவணை
தொகுஅளவு | வகை | எடை | விட்டம் |
---|---|---|---|
0000 | பக் (மான்) |
5.31 கிராம் (கி) | 9.70மி.மீ (0.380") |
000½ | பக் | 4.92 கி | 9.40மி.மீ (0.370") |
000 | பக் | 4.53 கி | 9.14மி.மீ (0.360") |
00½ | பக் | 3.82 கி | 8.60மி.மீ (0.340") |
00 | பக் | 3.49 கி | 8.38மி.மீ (0.330") |
0 | பக் | 3.17 கி | 8.13மி.மீ (0.320") |
#1½ | பக் | 2.9 கி | 7.90மி.மீ (0.310") |
#1 | பக் | 2.62 கி | 7.62மி.மீ (0.300") |
#2½ | பக் | 2.37 கி | 7.4மி.மீ (0.290") |
#2 | பக் | 1.91 கி | 6.86மி.மீ (0.270") |
#3½ | பக் | 1.7 கி | 6.60மி.மீ (0.260") |
#3 | பக் | 1.52 கி | 6.35மி.மீ (0.250") |
#4 | பக் | 1.34 கி | 6.09மி.மீ (0.240") |
FF | வாட்டர்பவுல் (நீர்ப்பறவை) |
1.18 கி | 5.84மி.மீ (0.230") |
F (or TTT) | வாட்டர்பவுல் | 1.04 கி | 5.59மி.மீ (0.220") |
TT | வாட்டர்பவுல் | 0.9 கி | 5.33மி.மீ (0.210") |
T | வாட்டர்பவுல் | 0.78 கி | 5.08மி.மீ (0.200") |
BBB | பேர்டு (சிறு பறவை) |
0.66 கி | 4.82மி.மீ (0.190") |
BB | பேர்டு | 0.55 கி | 4.60மி.மீ (0.180") |
BB (air gun) | பேர்டு | 0.52 கி | 4.57மி.மீ (0.177") |
B | பேர்டு | 0.48 கி | 4.50மி.மீ (0.170") |
#1 | பேர்டு | 0.4 கி | 4.10மி.மீ (0.160") |
#2 | பேர்டு | 0.29 கி | 3.76மி.மீ (0.150") |
#3 | பேர்டு | 0.33 கி | 3.6மி.மீ (0.140") |
#4 | பேர்டு | 0.21 கி | 3.28மி.மீ (0.130") |
#4½ | பேர்டு | 0.19 கி | 3.18மி.மீ (0.125") |
#5 | பேர்டு | 0.16 கி | 3.05மி.மீ (0.120") |
#6 | பேர்டு | 0.13 கி | 2.77மி.மீ (0.110") |
#7 | பேர்டு | 0.1 கி | 2.50மி.மீ (0.100") |
#7½ | பேர்டு | 83.59 மில்லிகிராம் (மிகி) |
2.39மி.மீ (0.095") |
#8 | பேர்டு | 70.63 மிகி | 2.26மி.மீ (0.090") |
#8½ | பேர்டு | 62.85 மிகி | 2.16மி.மீ (0.085") |
#9 | பேர்டு | 48.6 மிகி | 2.01மி.மீ (0.080") |
#10 | பெஸ்ட் (பூச்சி) |
33.04 மிகி | 1.80மி.மீ (0.070") |
#11 | பெஸ்ட் | 20.73 மிகி | 1.50மி.மீ (0.060") |
#12 | பெஸ்ட் | 12.31 மிகி | 1.30மி.மீ (0.050") |
Dust | பெஸ்ட் | 6.48 மிகி அல்லது அதற்கும் கீழ் |
1.00மி.மீ (0.040") அல்லது அதற்கும் கீழ் |
ஈயத்தால் நஞ்சுற்ற பறவை
தொகுஈயக் குண்டுகள் நீர்ப்பறவைகளில் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது என்று 1880-களில் ஐக்கிய-அமெரிக்காவில் முதன்முதலாக பதியப்பட்டது[2]. இவை அவற்றின் உடலில் ஊடுருவி, இரைப்பையில் உள்ள அமிலத்தால் சிதைந்து, இரத்த ஓட்டத்தில் கலந்து மரணத்தை உண்டாக்கின. "ஒரு பறவை ஒரேயொரு குண்டை விழுங்கினால், அதன் உயிருக்கு எந்தப் பங்கமும் நேராது, ஆனால் அதன் நோயெதிர்ப்பையும், கருத்தரிப்புத் திறனையும் குறைத்துவிடும். சிறு அளவுகளில் ஆன ஈயம் கூட, அதன் சக்தி சேமிக்கும் திறனைக் குறைத்து, இடம்பெயர்தலை கடினமாக்கிவிடும்.""[3]
காகம், கழுகு போன்ற தோட்டி விலங்குகள், இவ்வாறு இறந்த சடலங்களை உண்ணுகையில், அதன் உடலில் ஈயத்தின் அளவு உயரும். இவ்வாறு இரண்டாம் நிலை நஞ்சுறுதல் உண்டாகிறது.[4]
ஈயக் குண்டிற்கு நஞ்சில்லா மாற்றுகள்
தொகுஅங்கீகரிக்கப்பட்ட குண்டு வகை | கலவை விழுக்காடு (எடையில்) |
---|---|
பிசுமத்-வெள்ளீயம் | 97% பிசுமத், மற்றும் 3% வெள்ளீயம் |
இரும்பு (எஃகு) | இரும்பு மற்றும் கரிமம் |
இரும்பு-தங்குதன் | ஏதேனும் விகிதத்தில் தங்குதன், மற்றும் >1% இரும்பு |
இரும்பு-தங்குதன்-நிக்கல் | >1% இரும்பு, ஏதேனும் விகிதத்தில் தங்குதன், நிக்கல் 40% வரை |
தங்குதன்-வெண்கலம் | 51.1% தங்குதன், 44.4% தாமிரம், 3.9% வெள்ளீயம், மற்றும் 0.6% இரும்பு, அல்லது 60% தங்குதன், 35.1% தாமிரம், 3.9% வெள்ளீயம், மற்றும் 1% இரும்பு |
தங்குதன்-இரும்பு-தாமிரம்-நிக்கல் | 40-76% தங்குதன், 10-37% இரும்பு, 9-16% தாமிரம், and 5-7% நிக்கல் |
தங்குதன்-அணி | 95.9% தங்குதன், 4.1% பல்லுறுப்பி |
தங்குதன்-பல்லுறுப்பி | 95.5% தங்குதன், 4.5% நைலான் 6 or நைலான் 11 |
தங்குதன்-வெள்ளீயம்-இரும்பு | ஏதேனும் விகிதத்தில் தங்குதன் மற்றும் வெள்ளீயம், மற்றும் >1% இரும்பு |
தங்குதன்-வெள்ளீயம்-பிசுமத் | ஏதேனும் விகிதத்தில் தங்குதன், வெள்ளீயம், மற்றும் பிசுமத். |
தங்குதன்-வெள்ளீயம்-இரும்பு-நிக்கல் | 65% தங்குதன், 21.8% வெள்ளீயம், 10.4% இரும்பு, மற்றும் 2.8% நிக்கல் |
தங்குதன்-இரும்பு-பல்லுறுப்பி | 41.5-95.2% தங்குதன், 1.5-52.0% இரும்பு, and 3.5-8.0% புளோரோ-பல்லுறுப்பி |
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Guruswamy, Sivaraman (1999). "XIV. Ammunition". Engineering Properties and Applications of Lead Alloys. CRC Press. pp. 569–570. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8247-8247-4.
- ↑ Pokras, M.; Kneeland, M. (Sep 2008). "Lead poisoning: using transdisciplinary approaches to solve an ancient problem". EcoHealth 5 (3): 379–385. doi:10.1007/s10393-008-0177-x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1612-9202. பப்மெட்:19165554.
- ↑ Phasing Out The Use Of Lead Shot For Hunting In Wetlands: Experiences Made and Lessons Learned By AEWA Range States (PDF) (Report). AEWA. 5 Nov 2009. p. 3. பார்க்கப்பட்ட நாள் 17 November 2020.
- ↑ Green, E.; Hunt, G.; Parish, N.; Newton, I. (2008). Pizzari, Tom. ed. "Effectiveness of Action to Reduce Exposure of Free-Ranging California Condors in Arizona and Utah to Lead from Spent Ammunition". PLoS ONE 3 (12): e4022. doi:10.1371/journal.pone.0004022. பப்மெட்:19107211. Bibcode: 2008PLoSO...3.4022G.
- ↑ "Non Toxic Shot Regulations For Hunting Waterfowl and Coots in The U.S". US Fish and Wildlife Service. 4 Apr 2013. Archived from the original on 27 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 4 Apr 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)