ஈயம்(II) லாரேட்டு

வேதிச் சேர்மம்

ஈயம்(II) லாரேட்டு (Lead(II) laurate) Pb(C11H23COO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும். ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என ஈயம்(II) லாரேட்டு வகைப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான சோப்புகளைப் போல இது தண்ணீரில் கரையாது.[2][3] ஈய சோப்புகள் பாலி வினைல் குளோரைடுகளில் நிலைப்படுத்திகளாகவும் நெகிழியாக்கிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.[4]

ஈயம்(II) லாரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஈயம்(II) டோடெக்கானோயேட்டு
இனங்காட்டிகள்
15773-55-4 N
EC number 239-869-8
InChI
  • InChI=1S/2C12H24O2.Pb/c2*1-2-3-4-5-6-7-8-9-10-11-12(13)14;/h2*2-11H2,1H3,(H,13,14);/q;;+2/p-2
    Key: YDKNIVGNQVFYPR-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139203580
  • CCCCCCCCCCCC(=O)[O-].CCCCCCCCCCCC(=O)[O-].[Pb+2]
பண்புகள்
Pb(C
11
H
23
COO)
2
[1]
வாய்ப்பாட்டு எடை 606
தோற்றம் வெண்மையான திண்மம்
உருகுநிலை 104.7 °C (220.5 °F; 377.8 K)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

ஈய சோப்புகள் பொதுவாக ஈயம்(II) ஆக்சைடை உருகிய கொழுப்பு அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கப்படுகின்றன.

PbO + RCO2H → Pb(O2CR)2 + H2O

உண்மையில், ஈய சோப்புகள் சிக்கலான மூலக்கூற்று வாய்ப்பாடுகளைக் கொண்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Substances, United States Environmental Protection Agency Office of Toxic (May 1979). Toxic Substances Control Act (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. p. Volume III, p. 861. பார்க்கப்பட்ட நாள் 23 January 2023.
  2. Official Gazette of the United States Patent and Trademark Office: Patents (in ஆங்கிலம்). U.S. Department of Commerce, Patent and Trademark Office. 1985. p. 1839. பார்க்கப்பட்ட நாள் 23 January 2023.
  3. Official Gazette of the United States Patent Office (in ஆங்கிலம்). The Office. 1967. p. 310. பார்க்கப்பட்ட நாள் 23 January 2023.
  4. Nora, Angelo; Szczepanek, Alfred; Koenen, Gunther (2001). "Metallic Soaps". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a16_361. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈயம்(II)_லாரேட்டு&oldid=4168943" இலிருந்து மீள்விக்கப்பட்டது