ஈரிரும்பு சிலிசைடு
வேதிச் சேர்மம்
ஈரிரும்பு சிலிசைடு (Diiron silicide) Fe2Si என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உலோகங்களிடை சேர்மமான இது இரும்பின் சிலிசைடு உப்பாக வகைப்படுத்தப்படுகிறது. அண்ட தூசியில் ஆப்கைட்டு என்ற கனிமமாகவும் இயற்கையில் ஈரிரும்பு சிலிசைடு கிடைக்கிறது. இச்சேர்மத்தின் உட்கூறுகளான இரும்பும் சிலிக்கானும் விகிதவியல் அளவுகளில் இடம்பெறுவதில்லை. தயாரிக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டே இவ்விகிதம் மாறுபடுகிறது. இதனுடன் தொடர்புடைய Fe5Si3 இயற்கையில் சிஃபெங்கைட்டு என்ற கனிமமாக இயற்கையில் கிடைக்கிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஈரிரும்பு சிலிசைடு
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24945630 |
| |
பண்புகள் | |
Fe2Si | |
வாய்ப்பாட்டு எடை | 139.78 கி/மோல் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முக்கோணகம் (Ni2Al-type)[1] |
புறவெளித் தொகுதி | P3m1 (எண். 161), hP6 |
Lattice constant | a = 0.281 நானோமீட்டர், b = 0.281 நானோமீட்டர், c = 0.281 நானோமீட்டர் |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | இருகோபால்ட் சிலிசைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | colspan=2 |
| |
மேற்கோள்கள்
தொகு- ↑ Khalaff, K.; Schubert, K. (1974). "Kristallstruktur von Fe2Si(h)". Journal of the Less Common Metals 35 (2): 341–345. doi:10.1016/0022-5088(74)90247-1.