ஈழத்துச் சிறுகதை வரலாறு (நூல்)

ஈழத்துச் சிறுகதை வரலாறு செங்கை ஆழியான் க. குணராசாவால் எழுதப்பட்டு டிசம்பர் 2001 இல் வரதர் வெளியீடாக வெளிவந்தது. 2001 ஒக்டோபர் வரை வெளிவந்த 274 ஈழத்துச் சிறுகதை நூல்கள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. 399 ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளனர். ஈழத்தின் மூத்த எழுத்தாளர் வரதருக்கு இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

ஈழத்துச் சிறுகதை வரலாறு
நூல் பெயர்:ஈழத்துச் சிறுகதை வரலாறு
ஆசிரியர்(கள்):க. குணராசா
வகை:ஆய்வு நூல்
துறை:சிறுகதை வரலாறு
காலம்:2001
இடம்:யாழ்ப்பாணம் (பதிப்பகம்)
மொழி:தமிழ்
பக்கங்கள்:312
பதிப்பகர்:வரதர் வெளியீடு
பதிப்பு:2001
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

ஈழத்தின் சிறுகதை வரலாற்றை

  • சமுதாய சீர்திருத்தக் காலம் (1930- 1949)
  • முற்போக்குக் காலம் (1950 - 1960)
  • புத்தெழுச்சிக் காலம் (1961 - 1983)
  • தமிழ்த் தேசியவுணர்வுக் காலம் (1983 - )

என்னும் காலப் பகுப்புக்களாக வகுத்து இந்நூல் அமைந்துள்ளது.