உக்கடம் மேம்பாலம்

தமிழ்நாட்டின் கோயம்பத்தூர் நகரத்தில் கட்டப்படும் ஒரு பாலம்

உக்கடம் மேம்பாலம் (Ukkadam Flyover) கோயம்புத்தூர் நகரில் 2.5 கி.மீ. நீளமுள்ள மேம்பாலமாகக் கட்டப்பட்டு வருகிறது.[1] [2] இது உக்கடம்-ஆத்துபாலம் மேம்பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.

உக்கடம் மேம்பாலம்
Ukkadam Flyover
உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம்
அமைவிடம்
கோயம்புத்தூர், இந்தியா
சந்தியில் உள்ள
சாலைகள்:
பாலக்காடு சாலை, கோயம்பத்தூர்
சுங்கம் கிளைவழிச் சாலை
ஒப்பனக்காரத்தெரு
பேரூர் சாலை
கட்டுமானம்
வகை:மேம்பாலம்
வழித்தடங்கள்:4
அமைக்கப்பட்ட நாள்:( கட்டுமானத்தில் )

பின்னணி

தொகு

2019-ஆம் ஆண்டு மேம்பாலத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. உக்கடம் மற்றும் ஆத்துப்பாலம் சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. [3]

திட்டமிடல்

தொகு

இந்த மேம்பாலம் உக்கடம் சமிக்ஞை அருகே ஒப்பணகார தெருவின் மேற்கு முனையில் தொடங்கி கரும்புகடை வழியாக ஆத்துபாலம் சந்திப்பை நோக்கிச் சென்று பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. இந்த மேம்பாலம் சுங்கம் கிளைவழி சாலையில் வெளியேறும் மற்றும் நுழைவுப் பாதையைக் கொண்டிருக்கிறது.[3]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்கடம்_மேம்பாலம்&oldid=3645547" இலிருந்து மீள்விக்கப்பட்டது