உங்கள் நூலகம்
உங்கள் நூலகம் என்பது தமிழ் நாட்டில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் நடத்தும் மாத இதழ். 1985 ஏப்ரலில் துவங்கப்பட்டு 1990 வரை வெளிவந்தது. பின் மீண்டும் 2005ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்காலம் வரை வெளியாகிக் கொண்டிருக்கிறது. 2008 செப்டம்பர் வரை இருமாத இதழாக வெளிவந்தது. பின்னர் மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. 2010 திசம்பர் வரை இவ்விதழின் ஆசிரியராக ஆர். பார்த்தசாரதி இருந்தார். பழம்பெரும் தொழிற்சங்கவாதியும், மார்க்சியப் அறிவுஜீவியுமான ஆர். பார்த்தசாரதி 2011 ஜனவரியில் இயற்கை எய்தினார். அதற்குப் பின்பு சண்முகம் சரவணன் பொறுப்பாசிரியராக இருந்தார். இவ்விதழின் நோக்கம் புதிய நூல்கள் பற்றிய அறிமுகத்தை வழங்குவதும், வாசிப்பு விழிப்புண்ர்வை ஏற்படுத்துவதும் ஆகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 281–283. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.