உஜ்ஜெய்னி மகாகாளி கோயில்

சிறீ உஜ்ஜைனி மகாகாளி கோயில் (Sri Ujjaini Mahakali Temple) என்பது தெலங்காணாவில் உள்ள சிக்கந்திராபாத் பகுதியில் [1] உள்ள ஒரு கோயில் ஆகும். இது 191 ஆண்டுகள் பழமையானது. பக்தர்கள் ஒவ்வொரு நாளும் தெய்வத்திற்கு பிரார்த்தனை செய்கிறார்கள். குறிப்பாக, ஆனி மாத்தத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். இது பொதுவாக ஞாயிறு, திங்கட்கிழமைகளில் வருகிறது [2]. போனலு என்றப் பண்டிகைக்கும் இது பிரபலமானது [3] .

உஜ்ஜெய்னி மகாகாளி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தெலங்காணா
அமைவு:பொது வீதி, சிக்கந்தராபாத்
ஆள்கூறுகள்:17°26′12″N 78°29′28″E / 17.4366783°N 78.49107359999994°E / 17.4366783; 78.49107359999994
கோயில் தகவல்கள்

வரலாறு தொகு

1813 ஆம் ஆண்டில், நகரத்தில் வாந்திபேதி பரவியதாகவும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்ததாகவும் நம்பப்படுகிறது. அதே நேரத்தில் சிக்கந்திராபாத்தில் இருந்து மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனுக்கு ஒரு இராணுவ வீரர்கள் அடங்கிய ஒரு குழு அனுப்பப்பட்டது. ஒரு சிவிகை தாங்கி சூரிதி அப்பையா தனது கூட்டாளிகளுடன் உஜ்ஜைனில் உள்ள மகாகாளி கோயிலுக்குச் சென்று மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்தார். மக்களை தொற்றுநோயிலிருந்து காப்பாற்றினால், தான் தெய்வத்தை புதிதாக நிறுவுவதாக வேண்டிக்கொண்டார். [4] . உஜ்ஜைனிலிருந்து திரும்பி வந்தவுடன், அப்பையாவும் அவரது கூட்டாளிகளும் 1814 சூலை மாதம் சிக்கந்திராபாத்தில் மரத்தால் செய்யப்பட்ட சிலையை நிறுவினர்.

குறிப்புகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-24. பார்க்கப்பட்ட நாள் 2020-09-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-25. பார்க்கப்பட்ட நாள் 2020-09-10.
  3. "A sea of devotees throng Ujjiani Mahankali temple on Bonalu". The New Indian Express.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-12-24. பார்க்கப்பட்ட நாள் 2020-09-10.