உடற்பிடிப்பு

உடற்பிடிப்பு (massage) செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் வேகம் பெறுகிறது. அப்பகுதிக்கு அதிக சத்துக்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்தத்தின் திறன் அதிகரித்து அதன் பயன் கூடுகிறது.[1][2][3]

உடற்பிடிப்பு செய்யும் முறை

தொகு

கை கால்களிலிருந்து உடற்பிடிப்பை துவங்கவேண்டும். அடுத்து நெஞ்சு, கீழ்வயிறு, பின்புறம், பின்புற இடுப்பு ஆகிய பகுதிகளில் உடற்பிடிப்பு செய்யவேண்டும். பின்புறத்தில் உடற்பிடிப்பு செய்ய துணியைப் பயன்படுத்தலாம். மசாஜøக்குப் பின் குளிக்கலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் நனைந்த துணியால் உடம்பைத் துடைக்கலாம்.

உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உடற்பிடிப்பு தலைகீழாக செய்யப்பட வேண்டும். அதாவது தலையில் ஆரம்பித்து காலில் முடிக்கவேண்டும்.

எப்போது உடற்பிடிப்பு தவிர்க்க வேண்டும்?

தொகு

காய்ச்சலின் போது, கர்ப்பகாலத்தில் கூடாது. வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சனை, கட்டிகள் இருந்தால் கீழ்வயிற்றில் உடற்பிடிப்பு செய்யக்கூடாது. தோல்வியாதிகள் உள்ளவருக்கு உடற்பிடிப்பு ஏற்றதல்ல.

உடற்பிடிப்பு பயன்கள்

தொகு

மென்மையான உடற்பிடிப்பு நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து அவற்றுக்கு இதமளிக்கும். சற்று கடுமையான உடற்பிடிப்பு தளர்ந்த நரம்புகளைத் தூண்டி அவற்றின் திறனை அதிகரிக்கும்.

கீழ்வயிற்றுப் பகுதியில் உடற்பிடிப்பு செய்வதால் ஜீரண மண்டலம் தூண்டப்பட்டு கழிவுகள் நன்கு வெளியேறும். கல்லீரலின் ஆற்றல் அதிகரிக்கும்.

முறையான உடற்பிடிப்பு இருதய சுமையைக் குறைக்கும்.

தசைகளின் இறுக்கத்தை உடற்பிடிப்பு குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது. கடுமையான உழைப்பு தசைகளில் கொஞ்சம் கொஞ்சமாக லாக்டிக் அமிலத்தைச் சேர வைக்கிறது. தசைகளிலிருந்து அந்த லாக்டிக் அமிலத்தை உடற்பிடிப்பு நீக்குகிறது. அதன் மூலம் ஒரு புத்துணர்வையும் சக்தியையும் அளிக்கிறது.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Zerwekh, JoAnn (2018-10-25). Illustrated Study Guide for the NCLEX-RN® Exam E-Book: Illustrated Study Guide for the NCLEX-RN® Exam E-Book (in ஆங்கிலம்). Elsevier Health Sciences. p. 204. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-54736-9.
  2. Behrens, Barbara J. (2020-09-29). Biophysical Agents: Theory and Practice (in ஆங்கிலம்). F.A. Davis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-7196-4300-9.
  3. Sous, Dr Mahmoud (2021-11-19). HOLISTIC APPROACH TO YOUR HEALTH AND WELLNESS (in ஆங்கிலம்). Writers Republic LLC. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-63728-998-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடற்பிடிப்பு&oldid=4098628" இலிருந்து மீள்விக்கப்பட்டது