உடல் ஊனம் (Physical disability) என்பது ஒரு தனி நபரின் உடல் செயல்பாடு, இயக்கம், போன்றவற்றில் தோன்றும் இயலாமை மற்றும் குறைபாடு ஆகியவற்றைக் குறிக்கும். [1] சுவாசக் கோளாறுகள், கேட்கும் திறன் குறைபாடு, பார்வை இன்மை, பார்வைக் குறைபாடு, கால்-கை வலிப்பு [2] மற்றும் தூக்கக் கோளாறுகள் மனவள்ர்ச்சி குறைபாடு, மனநலக் குறைபாடு, மூளை முடக்குவாதம் போன்றவை பிற உடல் ஊனங்களாகும். இக்குறைபாடுகள் அன்றாட வாழ்க்கையின் பிற அம்சங்களையும் செயல்பாட்டையும் கட்டுப்படுத்துகின்றன.

காரணங்கள்

தொகு

பிரசவத்திற்குப் முன்பே உடலில் சில குறைபாடுகள் ஏற்படுகின்றன. இவை கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்பட்ட நோய்கள், கரு அல்லது கரு வளர்ச்சி விபத்துகள் அல்லது மரபணு கோளாறுகள் இதற்கு காரணமாக இருக்கலாம். [3][4]

பிரசவத்தின் போது குழந்தை பிறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு முதல் நான்கு வாரங்கள் வரை இயலாமை குறைபாடுகள் ஏற்படுகின்றன.[5] நீண்டகால ஆக்சிசன் பற்றாக்குறை அல்லது சுவாசக் குழாயில் அடைப்பு, குழந்தை பிறக்கும் போது மூளையில் பாதிப்பு (உதாரணமாக, பிரசவத்தின் போது மருத்துவ உபகரணகள் மூலம் குழந்தையை வெளியில் எடுக்கும்போது தற்செயலாக தவறாகப் பயன்படுத்துவதால் மூளை பாதிப்பு அடைதல்)[6] அல்லது குழந்தை முன்கூட்டியே பிறப்பது போன்ற காரணங்களால் இத்தகைய உடல் குறைபாடுகள் ஏற்படலாம். இவை மரபணு கோளாறுகள்[4] அல்லது விபத்துகள் காரணமாகவும் ஏற்படலாம்.

பிரசவத்திற்குப் பிறகும்' சில குறைபாடுகள் ஏற்படுகின்றன. விபத்துக்கள், காயங்கள், உடல் பருமன், தொற்று அல்லது பிற நோய்களால் ஏற்படலாம். இவை மரபணு கோளாறுகளாலும் ஏற்படலாம்.

வகைகள்

தொகு

இயக்கக் குறைபாடு என்பது மேல் அல்லது கீழ் மூட்டு இழப்பு அல்லது குறைபாடு, மோசமான மூளைப் பயிற்சித் திறன் மற்றும் உடலின் ஒன்று அல்லது பல உறுப்புகளுக்கு சேதம் ஆகியவை இயக்கக் குறைபாடுகளில் அடங்கும். உடல் இயக்கத்தில் இயலாமை என்பது பிறவியில் தோன்றியதாகவோ அல்லது பின்னர் வந்ததாகவோ அல்லது நோயின் விளைவாக உண்டானதாகவோ இருக்கும். உடைந்த எலும்பு அமைப்பு கொண்டவர்களும் இந்த வகைக்குள் அடங்குவர்.

பார்வைக் குறைபாடு என்பது மற்றொரு வகையான உடல் ரீதியான குறைபாடாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமான நபர்கள் பார்வைக் காயங்கள் அல்லது பார்வைக் குறைபாடுகளைக் கொண்டுள்ளனர். இந்த வகையான காயங்கள் குருட்டுத்தன்மை மற்றும் கண் அதிர்ச்சி போன்ற கடுமையான பிரச்சினைகள் அல்லது நோய்களுக்கும் வழிவகுக்கும். பார்வைக் குறைபாடுகளில் கிட்ட பார்வை, தூர பார்வை, கண் சிராய்ப்பு, ஸ்க்லெராவில் கீறல்கள், நீரிழிவு தொடர்பான கண் நிலைமைகள், வறண்ட கண்கள் மற்றும் கார்னியல் ஒட்டு, வயதான காலத்தில் கண் தசை சிதைவு மற்றும் விழித்திரைப் பற்றின்மை ஆகியவை அடங்கும்.

செவித்திறன் இழப்பு என்பது செவியின் ஒரு பகுதி அல்லது முழுமையான கேட்கும் சக்தி இல்லாமல் போவதாகும். காது கேளாதோர்களும் செவித்திறன் குறைபாடு கொண்டவர்களும் சமுகத்தில் ஏராளமானவர்கள் உள்ளனர்.[7][8] தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக சைகை மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம் இவர்கள் பயனடைகின்றனர்.[9][10] ஓரளவு மட்டுமே காது கேளாதவர்கள் தங்கள் காது கேட்கும் திறனை மேம்படுத்த சில சமயங்களில் கேட்கும் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். பேச்சு மற்றும் மொழி இயலாமை: பேச்சு மற்றும் மொழி செயல்முறைகளில் குறைபாடு கொண்டவர்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விலகல் வரம்பிற்கு வெளியே இருக்கின்றனர். இதனால் இத்தகையவர்களுக்கு முழுமையான சமூக அல்லது கல்வி வளர்ச்சி தடுக்கப் படுகிறது.

தூக்கமின்மை, நாட்பட்ட சோர்வு, நாட்பட்ட வலி மற்றும் வலிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் கோளாறுகளும் உடல் குறைபாடு காரணமாக இருக்கலாம்.

கேட்கும் திறன் இழப்பு என்பது பகுதியளவு அல்லது முழுமையான கேட்கும் திறன் குறைபாடாகும். காது கேளாதோர் மற்றும் கேட்கும் திறன் குறைபாடு உள்ளவர்கள்[11]<ref> மற்றவர்களுட்ன் தொடர்பு கொள்ள சைகை மொழியைக் கற்றுக்கொண்டு பேசுகின்றனர்.[8][9] பகுதியளவு மட்டுமே காது கேளாதவர்கள் சில சமயங்களில் தங்கள் கேட்கும் திறனை மேம்படுத்த கேட்கும் கருவிகளைப் பயன்படுத்தலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "What is disability?". Education to employment. National Disability Coordination Officer Program. University of Western Sydney. 2012. Archived from the original on July 24, 2013. பார்க்கப்பட்ட நாள் January 8, 2014.
  2. Physical Disabilities, California State University, Northridge
  3. "Prenatal Injury". ScienceDirect. Elsevier B.V. 2022. பார்க்கப்பட்ட நாள் 27 June 2022.
  4. 4.0 4.1 "Birth Defects Research & Prevention" (Government website). Bureau of Family Health and Nutrition. Massachusetts Center for Birth Defects Research and Prevention. Boston: Department of Public Health. 2022. பார்க்கப்பட்ட நாள் 27 June 2022.
  5. Wright, Joyce A. (2008). "Prenatal and postnatal diagnosis of infant disability: Breaking the news to mothers". The Journal of Perinatal Education (Springer: Lamaze International) 17 (3): 27–32. doi:10.1624/105812408X324543. ProQuest 1844560198. பன்னாட்டுத் தர தொடர் எண்:1058-1243. பப்மெட்:19436417. 
  6. "Operative Vaginal Delivery" (PDF). RCOG. NICE. January 2011. பார்க்கப்பட்ட நாள் 3 October 2018.
  7. Cooke, Michele L. (2018-10-11). "What is my deaf way of science?". UMass Magazine (in ஆங்கிலம்). University of Massachusetts Amherst. Archived from the original on 2019-05-03. பார்க்கப்பட்ட நாள் 2020-04-09.
  8. Dolnick, Edward (September 1993). "Deafness as Culture". The Atlantic (MasterFILE Complete: EBSCO) 272 (3): 37. பன்னாட்டுத் தர தொடர் எண்:0276-9077. இணையக் கணினி நூலக மையம்:936540106. http://gallyprotest.org/atlantic_monthly.pdf. 
  9. Mindess, Anna (2006). Reading Between the Signs: Intercultural Communication for Sign Language Interpreters. Sharon Neumann Solow, Thomas K. Holcomb. Boston: International Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-931930-26-0. இணையக் கணினி நூலக மைய எண் 829736204.
  10. Barnett, Steven; McKee, Michael; Smith, Scott R.; Pearson, Thomas A. (15 February 2011). "Deaf Sign Language Users, Health Inequities, and Public Health: Opportunity for Social Justice". Preventing Chronic Disease 8 (2): A45. பன்னாட்டுத் தர தொடர் எண்:1545-1151. பப்மெட்:21324259. 
  11. Cooke, Michele L. (2018-10-11). "What is my deaf way of science?". UMass Magazine (in ஆங்கிலம்). University of Massachusetts Amherst. Archived from the original on 2019-05-03. பார்க்கப்பட்ட நாள் 2020-04-09.

மேலும் வாசிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடல்_ஊனம்&oldid=4182523" இலிருந்து மீள்விக்கப்பட்டது