உடு

நைஜீரிய பாழங்குடியின இசைக்கருவி

உடு (Udu) என்பது ஒரு இசைக் கருவி ஆகும். இது நைஜீரியாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் கடம் போல இருப்பதோடு, பக்கவாட்டில் கூடுதலாக ஒரு துளை உள்ளது. இக்போ மொழியில், உடு என்றால் 'பாத்திரம்' என்று பொருள். உண்மையில் இது கூடுதலாக ஒரு துளை கொண்ட தண்ணீர் குடம் என்பதால், இதை சடங்கு பயன்பாட்டிற்காக இக்போ பெண்கள் வாசித்தனர். பொதுவாக உடு களிமண்ணால் செய்யப்படுகிறது. இது கைகளால் வாசிக்கப்படுகிறது. வாசிப்பவர் பானையின் பெரிய தளை வழியாக உட்புற வெற்றிடத்தில் தட்டி ஒலி எழுப்பப்படுகிறது.[1] உடுவில் உள்ள சிறிய துளைக்கு மேலே உள்ள கையைக் கொண்டு சுருதி மாற்றப்படுகிறது. மேலும், உடுவின் முழு பகுதிகளிலும் விரல்களால் தட்டி இசைக்கலாம். இன்று இது பல்வேறு இசை பாணிகளில் தாள இசைக்கருவியாக பயன்படுத்தப்படுகிறது.

ஒரு உடு பானை

தமிழ் நாடு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை கடம் தயாரிப்புகளுக்குப் பிரசித்தி பெற்ற இடமாகும். இங்கு தற்போது உடு தயாரிக்கப்படுகிறது. சிவமணி தன் கச்சேரிகளில் உடுவையும் பயன்படுத்துகிறார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Schlagwerk percussion website". Schlagwerk. Archived from the original on 7 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. வெ. நீலகண்டன், ஐம்பூதங்களும் அடங்கிய தேவ வாத்தியம், கட்டுரை, தினகரன் பொங்கல் மலர் 2016, பக்ககம்: 34-46,
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடு&oldid=4043479" இலிருந்து மீள்விக்கப்பட்டது