உணவுச் சங்கிலி

வாழ்க்கைக்கு உணவு மற்றும் ஆற்றலை நடத்துதல்

உணவுச் சங்கிலி (food chain) என்பது, ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழ்கின்ற உயிரினங்களுக்கு இடையிலான உணவுத் தொடர்பினை விளக்கும் சொற்றொடராகும். ஓர் வாழிடச் சூழல் வாழ்முறையில் ஓர் உணவு மட்டத்திலிருந்து மற்றொரு உணவு மட்டத்திற்கு உணவும், ஆற்றலும் கடத்திச் செல்லப்படுவதை உணவுச் சங்கிலி விளக்குகிறது. உண்மையில், உணவுச் சங்கிலி தொடர்புகள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன

சுவீடன் நாட்டு ஏரி ஒன்றில் அறியப்பட்ட ஒரு உணவுச் சங்கிலி

தாவரங்கள் அவற்றின் உயிரணுக்களில் இருக்கும் பச்சையத்தின் உதவியால், ஒளித்தொகுப்பு என்னும் செயல்முறை மூலம் காற்றில் உள்ள கார்பனீரொக்சைட்டை எடுத்துக் கொண்டு நிலத்திலிருந்து தண்ணிரையும், சூரியனின் ஆற்றலைப் பயன்படுத்தி உணவைத் தயரிக்கின்றன. இதனால் இவை முதல் நிலை (முதன்மை) உற்பத்தியாளர் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றிலிருந்தோ அல்லது வேறு வழியில் உணவைப் பெறும் உயிரினங்கள் நுகர்வோர் ஆகின்றன.[1]

நுகர்வோர்கள் உணவை எடுத்துக் கொள்ளும் முறையில் மூன்றுவகையாக பிரிக்கலாம். அவை:

  • தாவரத்தால் தயாரிக்கப்பட்ட உணவை நேரடியாக எடுத்துக்கொள்ளும் உயிரினங்கள் - தாவரவுண்ணிகள்
  • விலங்குகளின் மாமிசத்தை மட்டும் உணவாக் உட்கொள்ளும் உயிரினங்கள் - விலங்குண்ணிகள்
  • தாவரத்தையும் விலங்கையும் அதாவது இரண்டையும் உணவாக உட்கொள்ளும் உயிரினங்கள் - அனைத்துண்ணிகள்

இவ்வாறு தாவரங்களால் தயாரிக்கப்பட்ட உணவானது அல்லது ஆற்றலானது ஒரு மட்டத்திலிருந்து மற்றொரு நிலைக்கு செல்வதே உணவுச் சங்கிலி என்று அழைக்கப்படுகிறது. உணவுச் சங்கிலியானது ஒரு நேர்கோட்டில் இருக்கும் உணவுத் தொடர்பைக் குறிக்கும். இவ்வாறான பல்வேறு உணவுச் சங்கிலிகளுக்கிடையிலான இடைத்தொடர்புகளை உள்ளடக்கியதே உணவு வலை (en:Food Web) எனப்படும்.ref [2]

ஒரு உணவு வலையைக் காட்டும் வரைபடம்

எ.கா: 1. புல்-மான்-சிங்கம் 2. தேன் (பூக்கள்) - பட்டாம்பூச்சிகள் - சிறிய பறவைகள் - நரிகள்.

உணவு சங்கிலியும் உணவு வலையும்

தொகு

உணவுச் சங்கிலியானது நுகர்வு மற்றும் ஆற்றல் பரிமாற்றத்தின் நேரடி நேர்கோட்டுப் பாதையைப் பின்பற்றுவதால், உணவுச் சங்கிலி உணவு வலையிலிருந்து வேறுபடுகிறது. இயற்கை உணவுச் சங்கிலி உணவு வலையை உருவாக்குகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "The Food Chain". www2.nau.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-05-04.
  2. name="Rowland2015">Rowland, Freya E.; Bricker, Kelly J.; Vanni, Michael J.; González, María J. (2015-04-13). "Light and nutrients regulate energy transfer through benthic and pelagic food chains". Oikos (Nordic Foundation Oikos) 124 (12): 1648–1663. doi:10.1111/oik.02106. பன்னாட்டுத் தர தொடர் எண்:1600-0706. Bibcode: 2015Oikos.124.1648R. https://www.researchgate.net/publication/274903199. பார்த்த நாள்: 2019-10-25. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணவுச்_சங்கிலி&oldid=4145148" இலிருந்து மீள்விக்கப்பட்டது