உண்டாட்டு என்பது புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் ஒன்று. 400 பாடல்களில் இத்துறைப் பாடல்கள் ஐந்து உள்ளன.[1] இது வெட்சித்திணையின் துறைகளில் ஒன்று.

தொல்காப்பியம், வெட்சித் திணையின் 14 துறைகளில் ஒன்றாக இத் துறையைக் குறிப்பிடுகிரார்.

புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூல் வெட்சிப்படலத்தின் வரும் 19 துறைகளில் ஒன்றாக இதனைக் குறிப்பிடுகிறது. ஆனிரைகளைக் கவர்ந்து வந்தவர் மகிழ்ச்சியில் கள்ளுண்டு மகிழ்தல் இத்துறை.[2]

  • கள்ளுப்பானை மத்து ஆடி ‘வெண்கோள் தோன்றாக் குழிசி’ என்றும் [3] கள்ளை முள்ளுச் செடியிலுள்ள காரைப்பழம் போலத் ‘தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம்’ [4] என்றும் வன்பரணர் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றன.
  • ஆனிரைகளோடு தலைவனுக்குப் பச்சைப்பந்தல் போட்டு, புதுமணல் பரப்பி, மாட்டுக்கறியும், மட்டுக் கள்ளும் வைத்து வரவேற்க வேண்டும் என்கிறது ஒருபாடல்.[5]
  • துடியனுக்கும் கள் தருவர்.[6]
  • கன்றுடை மரை ஆ கவர்ந்து வந்தான்.[7]

அடிக்குறிப்புகள்

தொகு
  1. 257, 258, 262, 269, 297
  2. தொட்டிமிழும் கழல் மறவர்
    மட்டு உண்டு மகிழ்தூங்கின்று – புறப்பொருள் வெண்பாமாலை 15
  3. புறம் 257
  4. புறம் 258
  5. மதுரைப் பேராலவாயர், புறம் 262
  6. ஔவையார், புறம் 269
  7. வெள்ளைமாளர் புறம் 297
"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்டாட்டு&oldid=3304896" இலிருந்து மீள்விக்கப்பட்டது