உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்

உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் (Udayamarthandapuram Bird Sanctuary) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் 45 சகிமீ 2 (0.2 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயமாகும். இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான இச்சரணாலயம் 10 ° 26'59 வடக்கு 79 ° 27'58" கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் அமைந்திருக்கிறது.[1][2]

விலங்கு வளம்

தொகு
 
அகலவாய் நாரை

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிக எண்ணிக்கையில் இங்கு காணப்படும் ஊதா கானான் கோழி மற்றும் நத்தை குத்தி நாரைகள் முதலியன இச்சரணாலயத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். இவை தவிர இங்கு வெள்ளை அரிவாள் மூக்கன், இந்தியப் பாறை நாரை, வெண்கழுத்து நாரை, சாம்பல் நாரை, நாமக்கோழி, ஊதா நாரை, சிறிய நீர்க்காகம், துடுப்பு வாயன், செங்கால் நாரை முதலிய பறவைகள் இங்கு காணப்படுகின்றன.

உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் காணப்படும் பறவை இனங்களின் சில பட்டியலிடப்பட்டுள்ளது: நத்தைகுத்தி நாரை, நீலத் தாழைக்கோழி, இரவுநாரை (Night Heron), பாம்புத் தாரா (Darter), கூழைக்கடா, துடுப்பு வாயன், நாமக்கோழி, வெள்ளை ஐபிஸ், இந்திய பாறைகள் நாரை, வெள்ளை கழுத்து நாரை, சாம்பல்-ஹெரான், சிறிய நீர்க்காகம், மேலும் பல வகைப் பறவைகளும் இங்கு காணப்படுகின்றன. மேலும் சைபீரியா, உருசியா, திபெத் உள்ளிட்ட நாடுகளின் பறவைகளும், இந்த சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன.[3]

குறிப்பு

தொகு

45 கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள உதயமார்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் மேட்டூர் அணையிலிருந்து நீர் பெறுகின்ற ஓர் பாசன ஏரியால் பாசனவசதி பெறுகிறது. ஏப்ரல் மற்றும் ஆகத்து மாதங்களில் இவ்வேரி வறண்ட நிலையில் காணப்படுகிறது.

செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இச்சரணாலயத்தில் வசிக்கும் பறவைகளின் எண்ணிக்கை சுமார் 10,000 பறவைகளாக உயர்கிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் உதயமார்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தை பார்வையிட சிறந்த நாட்களாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Tamil Nadu Forest Dept,Udhayamarthandapuram Bird Sanctuary, 2007
  2. "Tiruvarur Collector behaved like autocrat: HC". The Hindu, K.T. Sangameswaran.
  3. "உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் காணப்படும் பறவைகள்". தினமலர், 2013.

வெளி இணைப்புகள்

தொகு