உத்கல் சம்மிலானி
உதகல் சம்மிலானி ( Utkal Sammilani ) என்பது ஒரு இந்திய சமூக மற்றும் கலாச்சார அமைப்பாகும். இது ஒடிசாவில் 1903 இல் மதுசூதன் தாசு என்பவரால் நிறுவப்பட்டது. தற்போதும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கிறது. [1]
வரலாறு
தொகுஉத்கல் சம்மிலானி மதுசூதன் தாசு என்பவரால் நிறுவப்பட்டது. [2] 62 "நிரந்தர உறுப்பினர்களை" உள்ளடக்கிய இதன் முதல் கூட்டம் 1903 இல் நடைபெற்றது. [3] ஒடிசா மாநிலத்தை ஒன்றிணைக்கும் பிரச்சாரமே இந்த அமைப்பின் முதல் நோக்கமாகும். [4]
1920 இல் சக்ரதர்பூரில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. மகாத்மா காந்தியாலும் இந்திய தேசிய காங்கிரசாலும் முன்னெடுக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் சேர அமைப்பு முடிவு செய்தது. [5] 2002 இல் வசந்தகுமார் பாணிகிரகி என்பவர் இதன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [6]
2010 ஆம் ஆண்டில், உத்கல் சம்மிலானி, ஒடியாவிற்கு "செம்மொழி அந்தஸ்து" வழங்க வேண்டும் என்றும், ஒடியா மொழி பேசும் ஆனால் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு வெளியே வசிக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் இந்திய அரசைக் கேட்டுக் கொண்டது. [7] உத்கல் சம்மிலானி ஒடிசா மாநிலத்தை அதன் நவீனகால நிலைக்கு ஒடிசாவாக மாற்றியதில் முக்கியப் பங்காற்றியது. [8] 2010 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தின் போலவரம் திட்டத்தை எதிர்த்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Staff Reporter (24 October 2009). "Central Nod to Rename Orissa Welcome". Hindustan Times (New Delhi).
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ "Death Anniversary of Utkal Gaurab Madhusudan Das" (PDF). Odisha Government. பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
- ↑ Makers of Modern Orissa.
- ↑ Indian Political Thought. PHI Learning Private Ltd.
- ↑ My Life, My work. Allied Publishers Private.
- ↑ "New Leader of Utkal Sammilani". Orrisa Matters. பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
- ↑ Staff Reporter (7 December 2010). "Utkal Sammilani's demand". The Hindu.
- ↑ "Protest Against". The Hindu. 15 September 2010.