உத்தரப்பள்ளி ஆறு

இந்தியாவில் பாயும் ஓர் ஆறு

உத்தரப்பள்ளி ஆறு (Utharappalli River) அல்லது வரட்டாறு என்று அழைக்கப்படுவது இந்தியாவின் கேரளாவில் உள்ள மிக நீளமான ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஆறுகளுள் ஒன்றாகும். உத்தரப்பள்ளி ஆறு அச்சன்கோவில் ஆற்றின் (வெண்மணி ஊராட்சி) புத்தத்தின்கரை கடவிலிருந்து உருவாகி, உத்திரப்பள்ளி கடவில் (புத்தனூர் ஊராட்சி) பம்பை ஆற்றுடன் கலக்கிறது. இது பம்பை ஆறு மற்றும் அச்சன்கோயில் ஆறு ஆகிய இரண்டின் கிளை ஆறாகும். அச்சன்கோயிலில் தொடங்கி பம்பையில் முடிகிறது. ஆலை, செரியநாடு, புலியூர் ஊராட்சி வழியாகச் செல்லும் இந்த ஆறு, இங்குள்ள மக்களுக்கும் அவர்களின் விவசாய நிலங்களுக்கும் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்திசெய்கிறது.

இந்த ஆற்றின் வழித்தடத்தில் அதிகப்படியான ஆக்கிரமிப்பு மற்றும் பல்வேறு தடைகள் காரணமாக இந்த ஆறு இப்போது கிட்டத்தட்ட இல்லாத நிலையில் உள்ளது. அண்மையில் 9.4 கி. மீ. வரட்டாற்றினை புத்துயிர் பெற செய்ய நீர் மேலாண்மை மற்றும் சீரான ஆற்றோட்டத்தினை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு மறுமலர்ச்சி திட்டம் ஒன்று கேரள அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Reporter, Staff (2022-02-14). "River rejuvenation project launched". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-02-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தரப்பள்ளி_ஆறு&oldid=3393632" இலிருந்து மீள்விக்கப்பட்டது