உத்தராஞ்சல் பல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்

உத்தராஞ்சல் பல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (Uttaranchal Dental and Medical Research Institute) இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தேராதூன் நகரில் அமைந்துள்ள ஒரு மருத்துவ மற்றும் பல் மருத்துவ நிறுவனமாகும். கல்லூரியில் இளங்கலை மட்டத்தில் ஐந்து ஆண்டு இளநிலை பல் அறுவை சிகிச்சை பட்டப்படிப்பும், முதுநிலை பட்டப்படிப்பில் 3 ஆண்டு முதுநிலை பல் அறுவை சிகிச்சை படிப்பும் கற்பிக்கப்படுகின்றன. சிறீநகரிலுள்ள ஏமாவதி நந்தன் பகுகுணா கார்வால் பல்கலைக்கழகத்துடன் இக்கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவக் கழகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்கம் போன்றவை கல்லூரியை அங்கீகரித்துள்ளன.

உத்தராஞ்சல் பல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்

இந்திய பல்மருத்துவக் குழு, புது தில்லி மற்றும் உத்தரகண்டம் சிறீநகர் ஏமாவதி நந்தன் பகுகுணா கார்வால் பல்கலைக்கழகம் வகுத்துள்ள கல்வி விதிகளின்படி இந்த நிறுவனம் பல் அறுவை சிகிச்சையில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை அளிக்கிறது. இளநிலை மற்றும் முதுநிலை பட்டத் தேர்வுகள் மற்றும் விருதுகளுக்காக இந்த நிறுவனம் சிறீநகர் ஏமாவதி நந்தன் பகுகுணா கார்வால் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இளநிலை பாடநெறியின் மொத்த படிப்புக் காலம் 4 ஆண்டுகள் + ஓராண்டு உள்ளிருப்புப் பயிற்சி என ஐந்தாண்டுகளாகும். ஒவ்வொரு கல்வியாண்டின் முடிவிலும் ஒரு தொழில்முறை தேர்வுகள் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகின்றன. இறுதி தொழில்முறை தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு ஒரு வருட கட்டாய சுழற்சி உள்ளிருப்புப் பயிற்சி முடிந்த பின்னரே பட்டம் வழங்கப்படும். முதுநிலைப் எஸ் படிப்பின் மொத்த காலம் 3 ஆண்டுகளாகும். [1]

சேர்க்கை

தொகு

இந்திய அரசாங்கம் நடத்தும் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரியில் சேர்க்கை நடைபெறுகிறது. [2]

வசதிகள்

தொகு
  • நூலகம்
  • ஆய்வகங்கள்
  • சிற்றுண்டியகம்
  • மாணவர்களுக்கு தங்குமிடம்
  • விளையாட்டு
  • கணினி ஆய்வகம்
  • இணைய இணைப்பு
  • அருங்காட்சியகம்
  • கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகள் [3]

நூலகம்

தொகு

400 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள கல்லூரி நூலகம் 150 பேர் அமரக்கூடிய திறன் 2500 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட நூல்களின் தொகுப்பு நூலகத்தில் உள்ளது. காணொளிக் காட்சி அறை, புத்தக வங்கி போன்ற அனைத்து கல்விசார் ஆதரவு நடவடிக்கைகளையும் நூலகம் உறுதி செய்கிறது. 100 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பத்திரிகைகள், தேசிய மற்றும் சர்வதேச வெளியீடுகள் அனைத்திற்கும் கல்லுரி சந்தா செலுத்தியுள்ளது. கிடைக்கக்கூடிய அனைத்து செய்தித்தாள்களும் நூல்களும் மாணவர்களை எளிதில் அடையக்கூடிய அணுகு முறை இங்கு பின்பற்றப்படுகிறது. [4]

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.euttaranchal.com/education/colleges/uttaranchal-dental-college-medical-research-institute.php
  2. http://www.highereducationinindia.com/institutes/uttaranchal-dental-medical-research-5541.php
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-09-26. பார்க்கப்பட்ட நாள் 2021-06-14.
  4. http://www.euttaranchal.com/education/colleges/uttaranchal-dental-college-medical-research-institute.php