உத்திராளிக்காவு பூரம்

கேரளதிதின் சமய விழா

உத்திராளிக்காவு பூரம் (ഉത്രാളിക്കാവ്) தென் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தின் தளப்பில்லை தாலுகாவில் உள்ள வடக்காஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ளள பெண் கடவுளான ஸ்ரீ ருத்திரமகாகாளிக்காவு (ശ്രീ രുധിരമഹാകാളികാവ്) கோவிலில் நடைபெறும் பாரம்பரியமாக நடைபெறும் திருவிழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி / மார்ச் மாதங்களில் நடைபெறும் பூரம் பண்டிகைக்கு இந்த கோயில் புகழ் பெற்றது. திருச்சூர் பூரத்திற்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான மக்கள் நெரிசல் அதிகமாகக் காணப்படும் பூரம் திருவிழாவாக இது கருதப்படுகிறது [1]

கோயில் வரலாறு

தொகு

கொத்துங்கல்லூர் -ஷோரனூர் மாநில நெடுஞ்சாலையில் வடக்கஞ்சேரிக்கு வடக்கே சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உத்ராளிக்காவு ஸ்ரீ ருத்ரமகாகாளிக்காவு கோயில் உள்ளது. திருச்சூர் - ஷோரனூர் ரயில் பாதையை ஒட்டி நெல் வயல்களுக்கு மத்தியிலும், மலைப்பாங்கான மற்றும் மலைகளால் சூழப்பட்டும், கோயிலைச் சுற்றி பூரமும் அதனுடன் தொடர்புடைய அம்சங்களான யானை ஊர்வலம், பட்டாசு, தாள இசைக்குழு போன்றவையும் இந்த திருவிழாவிற்கு கண்கவா் அழகை தருகின்றன. . கேரளாவில் உள்ள கோயில்களுடன் ஒப்பிடும்போது இந்த கோயில் அளவு சிறியது மற்றும் மாவட்டத்தின் தனிமைப்படுத்தப்பட்ட கிராமப்புறத்தில் அமைந்துள்ளதாக இருந்த போதிலும் பண்டிகை காலங்களில், கோயிலும் கிராமமும் ஊடக ஈர்ப்பு மற்றும் செய்திகளில் புகழ் பெறுகின்றன.

திருவிழா

தொகு

ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தின் ஆரம்பத்தில் உத்ராளிக்காவு திருவிழா நடத்தப்படுகிறது. திருவிழா கொடியேற்றுதல் (கொடியேட்டம் மலையாளம்: കൊടിയേറ്റം), மலையாள கொல்லம் சகாப்தத்தின் மாதமான கும்பாவின் இரண்டாவது செவ்வாய்க்கிழமை நடக்கிறது. (இதே நாளில் தான் மற்றொரு முக்கியமான உள்ளூர் திருவிழாவான மச்சத் மாமங்கம் (ஒரு வேளை, நடக்கிறது) அடுத்த ஏழு நாட்களின் முடிவில், அடுத்த செவ்வாயன்று, மதிப்புமிக்க செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, உண்மையான பூரம் நடத்தப்படுகிறது.

பூரம் என்பது கேரள இந்து சடங்கு திருவிழாவாகும், இதில் பொதுவாக யானைகள் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ஊர்வலத்தில் வழிநடத்தப்படுகின்றன. உத்திரகாளிக்காவு பூரத்தில், என்காக்காடு, குமாரநெல்லூர் மற்றும் வடக்காஞ்சேரி என்ற மூன்று அண்டை கிராமத்து கோயில்கள் இருந்து அணிகளாக, ஒவ்வொருவரும் வருவா். பங்கேற்கும் ஒவ்வொரு குழுவும் பொதுவாக ஏழு முதல் பதினொரு யானைகளை வழங்குகின்றன, இவை அனைத்தும் பாரம்பரிய தந்த முகமூடிகளால் (நெற்றிப்பட்டம்) அலங்கரிக்கப்பட்டுள்ளன.[2]

யானை ஊர்வலத்தைத் தவிர, உத்ராளிக்காவுவில், குதிரா வேலா என்ற மரக் குதிரை ஊர்வலம் மற்றும் பல்வேறு சமூகங்களால் அர்ப்பணிக்கப்பட்ட இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகளும் அன்புச் சடங்குகளும் செய்யப்படுகின்றன.. பூரத்தின் முக்கியமான கூறுகளில் ஒன்று தாள இசைக்குழுவின் நிகழ்ச்சிகளாகும் (பஞ்சாவத்யம், மேலம் போன்றவை). ). குறிப்பாக, 'நாதப்புரா' (சச்சா) பஞ்சாவாத்தியம் என்பது மத்திய கேரளாவின் முன்னணி பஞ்சவத்தியக் கலைஞர்களின் தாள நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்க கச்சேரி ஆகும்.

வாணவேடிக்கை

தொகு

நென்மாரா வல்லங்கி வேலாவுக்குப் பிறகு இது இரண்டாவது பெரிய பட்டாசுத் திருவிழா ஆகும். பூரத்தின் போது மிகவும் அற்புதமான நிகழ்ச்சி இரண்டு முறை நடக்கும் வான வேடிக்கை மற்றும் இடிச்சத்த வானவேடிக்கை ஆகும். ஒன்று பூரம் நாளில் மாலை 4 மணி மற்றும் அடுத்த நாள் அதிகாலை நேரங்களில் (பொதுவாக 4:00 மணிக்கு)   . கேரள கோயில் திருவிழாக்களில் பட்டாசு நிகழ்ச்சிகள் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகின்றன.. விசித்திரமான நிலப்பரப்பு (பல மலைகளால் சூழப்பட்ட ஒரு குறைந்த பள்ளத்தாக்கு என்பதால்) ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நன்கு வடிவமைக்கப்பட்ட வெடிக்கும் ஒலிகளுக்கு கூடுதல் எதிரொலிப்பையும் வலுவூட்டலையும் சேர்க்கிறது. இந்த நிகழ்ச்சியை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கூடும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ரசிக்கின்றனர். நென்மாரா வல்லங்கி வேலாவும் பூரம் போல கொண்டாடப்படுகிறது, மேலும் இந்த நிகழ்வு பட்டாசுப் போட்டிக்கு (வெடிக்கேட்டு) பிரபலமானது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்திராளிக்காவு_பூரம்&oldid=3488684" இலிருந்து மீள்விக்கப்பட்டது