உந்தி அல்லது திருகு என்பது ஒரு சுழலும் இயந்திரவியல் சாதனம் ஆகும். இது வேறுபட்ட கோணங்களில் இணைக்கப்பட்டிருக்கும் பல பட்டைகளை கொண்டிருக்கும். இந்த பட்டைகள் சீராக சுத்தும் போது, ஒரு சுழற்சியை உருவாக்குகின்றன. மேலும் இது நீர் அல்லது காற்றில் சுழலும் போது ஒரு நேரியல் உந்துசக்தியை உருவாக்குகின்றது.[1] உந்திகள் பொதுவாக ஒரு குழாய் வழியாக திரவத்தை செலுத்துவதற்கோ அல்லது ஒரு படகை நீர் வழியாகவோ அல்லது ஒரு வானூர்தியை காற்று வழியாகவோ செலுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஒரு திரவத்தில் அவை சுழலும் போது பட்டைகளின் மேற்பரப்புகளுக்கு இடையில் ஓர் அழுத்த வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. பெர்னோலியின் தத்துவத்தின் படி இது அந்த திரவத்தின் மீது ஒரு உந்துசக்தியை செலுத்துகிறது.[2]

கப்பலில் உள்ள ஒரு உந்தி. இது கப்பலை முன்னோக்கி செலுத்த கடிகார திசையில் சுழல்கிறது.
வானூர்தியில் பொருத்தப்பட்டுள்ள உந்தி.

பொதுவாக பெரிய கப்பல்கள் மற்றும் வானூர்திகளில் பயன்படுத்தப்படும் பெரிய விட்டம் கொண்ட, மெதுவாக திருப்பும் திருகுகள் அதிக திறனுள்ளவையாக இருக்கின்றன. நியூட்டனின் இயக்க விதிகளைப் பயன்படுத்தி, ஒரு உந்தியின் உந்துசக்தி என்பது அது சுழலும் போது அதானால் பின்னோக்கி அனுப்பப்படும் திரவத்தின் நிறை மற்றும் எடைக்கு விகிதாசாரமாக ஒரு எதிர்வினை என்று கூறலாம்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Propeller". Encyclopedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  2. "Propeller Propulsion". NASA. 5 May 2015. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  3. "How propellers work". Deep blue. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உந்தி&oldid=3910602" இலிருந்து மீள்விக்கப்பட்டது