உந்தேதரயா
உந்தேதரயா இந்தியாவின் கர்நாடக மாநில தும்கூர் , பெங்களூர் , மைசூர் , ராமநகரா மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களில் அதிக அளவில் வாழும் குஞ்சிடிகா என்ற சமூக மக்களின் பழம்பெரும் தலைவர் ஆவார். அவர்களின் மூதாதையரான ஜலதி பப்பராயருடன் சேர்ந்து இன்றும் குஞ்சித்திக மக்களால் தெய்வமாக வணங்கப்படுகிறார்.
புராண
தொகுகுஞ்சிட்டிகர்கள் வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும், 12ம் நூற்றாண்டில் அந்தப் பகுதியில் பல்வேறு கால சூழ்நிலைகளால் தெற்கே குடியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் நம்பப்படுகிறது. இந்த இடம்பெயர்வு தொடர்பான பெரும்பாலான புராணக்கதைகளில் ஒரு முஸ்லீம் ஆட்சியாளர் சம்பந்தப்பட்டுள்ளார், அவர் அம்மக்களின் தலைவரான உந்தேதரயாவின் மகள்கள் மீது ஆசை கொண்டதாகவும், மூத்த மகளை திருமணம் செய்த பின்பாகவும், இளைய மகளையும் விரும்பியதாகவும் கூறப்படுகிறது. அதற்க்கு உடன்படாமல் அந்த முஸ்லீம் ஆட்சியாளரிடமிருந்து அவரும் அவரது கூட்டத்தாரும் தப்பிச் செல்லும்போது, அவரால் நிரம்பி வழியும் ஆற்றைக் கடக்க முடியவில்லை (சில கதைகளில் கோதாவரி என்று கூறுகின்றன, மற்றவர்கள் துங்கபத்ரா என்று கூறுகின்றனர்), தனது மக்களின் பாதுகாப்பிற்காக அந்த இடத்தை விட்டு வெளியேறி அவர்களை தெற்கே உள்ள இன்றைய கர்நாடகாவின் தும்கூர் மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.
குருபா இன ரட்சகர்
தொகுஅம்மக்களின் இரண்டு தெய்வீக ஸ்தாபகர்களில் ஒருவரான ஜலதி பாப்பராயா என்ற குருபா [1] [2] [3] இனத்தை சார்ந்தவர் உந்தேதரயாவிற்க்கு உதவினார்( மற்றொன்று அவினாகமராயர்). [4] ஜலதி பப்பரையா தனது தொழிலின் அடையாளமான கம்பளிப் போர்வைகளை நெய்வதற்குப் பயன்படுத்தப்படும் குஞ்சாவை (கொத்து) கையில் வைத்திருந்தார். ஜலதி தப்பியோடிய மக்களுக்கு எளிதான பாதையை உருவாக்க நதி தேவதைக்கு தன்னை ஒரு பலியாக அர்ப்பணித்ததாகக் கூறப்படுகிறது. அதனாலேயே தனது பரம்பரைக்கே அவரது பெயரை வைத்ததாகவும் மேலும் உந்தேதரயா தனது மகளை ஜலதி பாப்பராயாவின் உடலை திருமணம் செய்ய வழங்கியதாகவும், பின்னர் அவர் தெய்வீக அருளால் உயிர்பெற்றதாகவும் கூறப்படுகிறது. உந்தேதரயா, ஜலதி பாப்பராயா மற்றும் அவினகமராயர் ஆகியோர் குஞ்சிதிகர்களின் மூதாதையர்களில் அடங்குவர். ஆற்றைக் கடந்த பின்னர், குஞ்சிட்டிகர்கள் முதலில் விஜயநகரில் குடியேறினர், பின்னர் சித்ரதுர்கா மாவட்டத்தின் நந்தனா ஓசூருக்கு தெற்கே நகர்ந்தனர், அங்கு அவர்கள் இன்னும் தங்கள் தலைமையகமாகக் கருதப்படும் சிராவுக்கு குடிபெயர்ந்தனர். [5][6][3] இது ஒரு புதிய சமூகத்தின் தொடக்கத்தை அறிவித்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ V.T, Sundaramurthy (2007). "The Genesis, Divisions, Movement and Transformation of Okkaligar Community". The Anthropologist 9 (4): 305–313. doi:10.1080/09720073.2007.11891017. http://www.krepublishers.com/02-Journals/T-Anth/Anth-09-0-000-000-2007-Web/Anth-09-4-000-07-Abst-PDF/Anth-09-4-305-07-399-Sundaramurthy-V-T/Anth-09-4-305-07-399-Sundaramurthy-V-T-Tt.pdf.
- ↑ Nanjundayya, H.V; Iyer, L.K Ananthakrishna (1931). The Mysore Tribes and Castes. Mysore: The Mysore University. p. 17.
- ↑ 3.0 3.1 Thurston, Edgar (1909). Castes and Tribes of Southern India, Volume 4. Vol. 4. Madras: Government Press.
- ↑ Nanjundayya, H.V; Iyer, L.K Ananthakrishna (1931). The Mysore Tribes and Castes. Mysore: The Mysore University. p. 17.
- ↑ Nanjundayya, H.V; Iyer, L.K Ananthakrishna (1931). The Mysore Tribes and Castes. Mysore: The Mysore University. p. 17.
- ↑ M, Puttaiah (1973) [1973]. Kunchitigara Samajada Charitre. Bangalore. p. 21.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link)