உபாசகர்கள்

உபாசகர்கள் (ஆண் பால்), உபாசகி (பெண் பால்) பாளி மற்றும் சமசுகிருத மொழிகளில் பௌத்த குருமார்களுக்கும், சீடர்களுக்கும் உதவி செய்பவர்களான எளிய உதவியாளர்களைக் குறிப்பதாகும். [1] இல்லறவாசிகளான உபாசகர்கள் சமயச் சாத்திரங்கள் கற்க அவசியமில்லை. உபாசகர் அல்லது உபாசிகள், தங்கள் குருமார்கள் மற்றும் அவரது சீடர்களுக்கு சமைத்த உணவு, துணி முதலியன தானம் அளித்தல், தங்குவதற்கான கட்டிடங்கள், குடிசைகள், கற்குகைகள் அமைத்து தருதல் போன்ற உதவி செய்வார்கள். [2]உபாசகர்கள் சமயச் சாத்திரங்களைக் கற்க அவசியமில்லை. இந்த சமய உதவியாளர்களான உபாசகர்கள் அல்லது உபாசகிகள் பிக்குகள் அல்லது பிக்குணிகள் அல்லர்.

உபாசகர்களுக்கான பஞ்சசீலம்

தொகு

உபாசகரகள் பஞ்சசீலங்களை தங்கள் வாழ்க்கையில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அவைகள்:

  1. நான் வாழ்க்கையை மனக்கிளர்ச்சியுடன் செலுத்த மாட்டேன்.
  2. எனக்குக் கொடுக்கப்படாததை நான் எடுத்துக் கொள்ளமாட்டேன்.
  3. நான் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடமாட்டேன்.
  4. நான் பொய்யான பேச்சிலிருந்து விலகிவிடுவேன்
  5. நான் போதையிலிருந்து விலகிவிடுவேன்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Nattier (2003), p. 25, states that the etymology of upāsikā suggests "those who serve" and that the word is best understood as "'lay auxiliary' of the monastic community."
  2. [Upasaka

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உபாசகர்கள்&oldid=4059875" இலிருந்து மீள்விக்கப்பட்டது