உபெரோடான் ரோகானி
உபெரோடான் ரோகானி | |
---|---|
இலங்கையின் திரிகோணமலையில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | உ. ரோகானி
|
இருசொற் பெயரீடு | |
உபெரோடான் ரோகானி கார்க் மற்றும் பலர் 2018 |
ரோகான் கோளத் தவளை (Rohan's globular frog) என்று பொதுவாக அழைக்கப்படும் உபெரோடான் ரோகானி (Uperodon rohani), கூர்வாய்த் தவளைச் சிற்றினமாகும். இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1]
சொற்பிறப்பியல்
தொகுஇலங்கை மீன்கள் மற்றும் நீர்நிலவாழ் உயிரினங்கள் பற்றிய படைப்புகளுக்காக அறியப்பட்ட விஞ்ஞானி ரோகான் பெத்தியகோடா பெயரால் இது அழைக்கப்படுகிறது.
வகைப்பாட்டியல்
தொகுகோளத் தவளை முன்பு உபெரோடான் வேரிகாட்டசுடன் ஒத்ததாகக் கருதப்பட்டது. ஆனால் 2018-இல் பிரிக்கப்பட்டது. இவற்றுக்கிடையேயான மரபணு சுமார் 2.8% வேறுபட்டது.[1]
விளக்கம்
தொகுகோளத் தவளை ஒரு சிறிய தவளை ஆகும். பொதுவாக ஆண் தவளை 26-34 மில்லிமீட்டர் நீளமும், பெண் தவளை 28-35 மில்லிமீட்டர் நீளம் உடையது. இது அரக்கு நிறத்தில் சற்று வெளிர் ஆலிவ் மஞ்சள் புள்ளிகளுடன் காணப்படும். இதன் வயிறு மற்றும் தொடையின் அருகே அடர்த்தியாக ஆலிவ் புள்ளிகள் உள்ளன.[1] இது ஓரளவு ஒளி ஊடுருவக்கூடிய கால் மற்றும் கணுக்கால் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பரவல்
தொகுகோளத் தவளை இலங்கை முழுவதும் காணப்படுகிறது. ஆனால் தாழ்நிலங்களில் மிகவும் அதிகமாகக் காணப்படும்.[1]
வாழ்விடம்
தொகுகோளத் தவளை குளங்கள் மற்றும் குட்டைகள் போன்ற ஈரமான சூழல்களில் காணப்படுகிறது. நீர்நிலைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள், நெல் வயல்கள் போன்ற விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்குள் உள்ள ஈரமான இடங்கள், குளியலறைகள் போன்ற இடங்களில் பொதுவாகக் காணப்படுவதால் இது தொடர்ந்து மனிதர்களுடன் தொடர்பு கொள்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Uperodon rohani". AmphibiaWeb. பார்க்கப்பட்ட நாள் 2021-05-06.