உபேந்திரநாத் பர்மன்

உபேந்திரநாத் பர்மன் (Upendranath Barman) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1899 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக, மேற்கு வங்காளத்தில் உள்ள கூச் பெகர் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு உபேந்திரநாத் பர்மன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

உபேந்திரநாத் பர்மன்
Upendranath Barman
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1952-1962
பின்னவர்தேவேந்திரநாத் கார்ச்சி
தொகுதிகூச் பிகார், மேற்கு வங்காளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1899-12-01)1 திசம்பர் 1899
கோபால்பூர் , கூச் பெகர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு7 பெப்ரவரி 1988(1988-02-07) (அகவை 88)
இயல்பைகுரி, மேற்கு வங்காளம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்
சிரோதேவலா தேவி (தி. 1926)
பிள்ளைகள்6
மூலம்: [1]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பர்மன் இராச்பன்சி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கூச் பெகரில் தந்தை பிரநாராயண பர்மனுக்கு மகனாகப் பிறந்தார். கூச் பெகரில் உள்ள விக்டோரியா கல்லூரியில் பட்டம் பெற்றார் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் சட்டப் பாடத்தில் பட்டம் பெற்றார். இயல்பைகுரியில் சில ஆண்டுகள் வழக்கறிஞர் தொழில் செய்தார். 1926 ஆம் ஆண்டில் சிரோதேவால தேவியை மணந்து கொண்டார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் இருந்தனர். உபேந்திரநாத் 1988 ஆம் ஆண்டில் இறந்தார்.[1]

அரசியல் வாழ்க்கை

தொகு

பர்மன் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் ஓர் உறுப்பினராக இருந்தார். 1937 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை வங்காள சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1941 மற்றும் 1943 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மாநில அமைச்சராகவும் பணியாற்றினார். 1952 ஆம் ஆண்டில் நடந்த முதல் பொதுத் தேர்தலில், வடக்கு வங்காள மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1957 ஆம் ஆண்டில் மீண்டும் மக்களவை தேர்தலில் கூச் பெகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

செயல்பாடுகள்

தொகு

பர்மன் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். பின்னர் 'தாழ்த்தப்பட்ட வகுப்பினர்' என அழைக்கப்படும் பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீடு, இந்திய அரசு சட்டம், 1935 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டது, இச்சட்டத் திருத்தம் பிரித்தானிய பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது, ஆனால் பின்தங்கிய சாதிகளின் நிலை மேம்படவில்லை என்று பர்மன் நம்பினார். இவரைப் பொறுத்தவரை, கல்வி பெறும் வாய்ப்பைப் பெற்ற ஒரு சில சலுகைகள் மட்டுமே சிறந்த நிலையில் இருந்தன.

இலக்கிய வாழ்க்கை

தொகு

இராச்பன்சி சமூகத்தின் வரலாறு மற்றும் இராச்பன்சி சமுகத்தினரின் இலக்கிய வரலாறு ஆகியவற்றை பர்மன் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Upendranath Barman, the voice in Constituent Assembly for uplift of backward classes". Rupanwita Bhattacharjee. The Print. 22 December 2018. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
  2. India. Parliament. Lok Sabha; India. Parliament. Lok Sabha. Secretariat (1957). Who's who. Lok Sabha. p. 38. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
  3. Paswan, S.; Jaideva, P. (2002). Encyclopaedia of Dalits in India: Leaders. Encyclopaedia of Dalits in India. p. 224. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-033-2. பார்க்கப்பட்ட நாள் 12 Mar 2023.
  4. The Constituent Assembly of India (Legislative) Debates: Official Report. Manager of Publications. 1948. p. 648. பார்க்கப்பட்ட நாள் 12 Mar 2023.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உபேந்திரநாத்_பர்மன்&oldid=3820968" இலிருந்து மீள்விக்கப்பட்டது