உப்பனாறு
உப்பனாறு என்பது காவிரி ஆற்றின் கிளை ஆறு ஆகும். உப்பனாறு நாகப்பட்டினம் அருகே வங்கக்கடலை அடைகிறது.
மாசு
தொகுஉப்பனாறு நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்களால் மிகவும் மாசுபடுத்தப்படுகிறது. இதனால், இங்குள்ள நீரில் அதிக அளவு அரிதான தனிமங்கள் (இரும்பு, மாங்கனீசு, காரீயம், தாமிரம், துத்தநாகம், குரோமியம், நிக்கல் ஆகியவை) இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.[1]. தொழிற்சாலைக் கழிவுகள் பல வருடங்களாகத் தொடர்ந்து ஆற்றில் விடப்பட்டதால் இப்போது அது சீர்கெட்டு, நிலத்தடி நீரையும் பாதித்துள்ளது. இதனால், வேளாண்மையும், மீன்பிடி தொழிலும் பெருமளவு பாதிப்படைந்துள்ளன[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ M. P. Jonathan , S. Srinivasalu, N. Thangadurai, T. Ayyamperumal, J. S. Armstrong-Altrin, V. Ram-Mohan (2008). "Contamination of Uppanar River and coastal waters off Cuddalore, Southeast coast of India". Environmental Geology 53: 1391. http://link.springer.com/article/10.1007%2Fs00254-007-0748-0.
- ↑ ந. வினோத் குமார் (30 மே 2015). "கடலூர் சிப்காட், இன்னொரு போபால்?". தி இந்து (தமிழ்). http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/article7261665.ece. பார்த்த நாள்: 24 ஏப்ரல் 2016.
வெளியிணைப்புகள்
தொகு- உப்பனாற்றை ஆக்கிரமித்துள்ள வெங்காய தாமரைகள் பரணிடப்பட்டது 2012-11-08 at the வந்தவழி இயந்திரம், மாலைமலர்